சிமெண்ட் உற்பத்தித் தொழில் Cement production Business இந்தியாவில் உள்ள உற்பத்தித் தொழில்களுள் மிக முக்கியமான தொழிலாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிமெண்ட் தொழிற்சாலைகளின் Cement Industries பங்களிப்புப் பெருமளவில் உள்ளது. உலகில் அதிகமாகச் சிமெண்ட் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவுக்கு இரண்டாமிடம். சீனா முதலிடத்தில் உள்ளது.
ஸ்மார்ட் சிட்டிகளும் Smart cities சிமெண்ட்டுக்கான தேவையும் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருவதைத் தற்போதைய ஆய்வுகள் Research வெளிப்படுத்துகின்றன. இந்தியாவில் உள்ள நகரங்களை அனைத்து வசதிகளும் திறன்களும் மிக்க நகரங்களாக மாற்றும் "ஸ்மார்ட் சிட்டி" Smart City plan திட்டத்திற்காக 99 நகரங்கள் 99 cities தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களின் அடிப்படைக் கட்டுமானப் பணிகள் விரிவாக்கத்திற்காக அதிகமான அளவில் சிமெண்ட் தேவைப்படும். இதன் காரணமாகச் சிமெண்ட் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
நீங்களும் முயற்சிக்கலாம்
இப்படியான சூழ்நிலையில் சிமெண்ட் விற்பனை டீலர்கள், மற்றும் சிமெண்ட் விற்பனை உரிமை முகமையைப் பெற்றிருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். எனவே, தொழில் வாய்ப்புகளை எதிர்நோக்கிக் காத்திருப்பவர்கள், அவர்களுடைய பகுதிகளில், சிமெண்ட் விற்பனைக்கான டீலர்சிப் மற்றும் விற்பனை உரிமையினைப் பெறுவதற்கு முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும். சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனத்திடமிருந்து சிமெண்ட் விற்பனைக்கான உரிமையைப் பெறுவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்ப்போம்.
சிமெண்ட் நிறுவனம் சிமெண்ட் விற்பனைக்கான உரிமத்தைப் பெற முயற்சிக்கும் பொழுது நீங்கள் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியது எந்த நிறுவனத்திடமிருந்து விற்பனை உரிமையைப் பெறப்போகிறோம் என்பதைத்தான். நாம் யாரிடமிருந்து விற்பனை உரிமையைப் பெறுகிறோமோ அந்நிறுவனத்தின் சிமென்டை, அந்நிறுவனத்தின் வியாபார நெறிமுறைகளுக்கு உட்பட்டு விற்க வேண்டும். JK, ACC, அல்ட்ரா டெக், பங்கூர், அம்புஜா, ரிலையன்ஸ், ஸ்ரீ அல்ட்ரா, Jaypee போன்ற ஏதாவது ஒரு நிறுவனத்தின் சிமெண்ட் விற்பனை உரிமையைப் பெற முயற்சிக்கலாம்.
சிமெண்ட்டின் வகை
சிமென்டில் பொதுவாக இரண்டு வகை உள்ளது. ஒன்று வெள்ளை நிறச் சிமெண்ட் இன்னொன்று சாம்பல் நிறச் சிமெண்ட் (White and Grey). சில உற்பத்தி நிறுவனங்கள் வெள்ளை மற்றும் சாம்பல் நிறச் சிமெண்ட்டிற்கு என்று தனித்தனியாக விற்பனை உரிமையை வழங்குகின்றன. உதாரணமாக JK சிமெண்ட் நிறுவனம், வெள்ளை மற்றும் சாம்பல் நிறச் சிமெண்ட்டிற்கெனத் தனித்தனியான விற்பனை உரிமையை வழங்குகின்றது. ஏற்கனவே டைல்ஸ், பெயிண்ட் மற்றும் இரும்பு வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் வெள்ளை சிமெண்ட் விற்பனை உரிமையை Jk நிறுவனம் வழங்குகிறது. இந்நிறுவனம், சிமெண்ட் மற்றும் அது சார்ந்த பிற பொருட்களின் விற்பனைத் தொழிலில் தகுந்த முன் அனுபவத்தை எதிர்பார்க்கிறது. அதே சமயத்தில் ACC சிமெண்ட் நிறுவனம் போன்றவை முன் அனுபவம் இல்லாத புதியவர்களுக்கும் விற்பனை உரிமையை வழங்குகின்றது.
விற்பனை உரிமையைப் பெறுவதற்கான தேவைகள்
விற்பனை உரிமையைப் பெற விண்ணப்பிப்பவர்கள் நன்கு காலூன்றிய நிறுவனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என அனைத்துச் சிமெண்ட் நிறுவனங்களும் விரும்புவதில்லை. விற்பனை வரி கட்டுவோருக்கான அடையாள எண்ணைப் பெற்று (TIN) முறையான அனுமதியுடன் வணிகத்தில் ஈடுபடுகின்ற அனைவருமே சிமெண்ட் விற்பனை உரிமையைப் பெறத் தகுதியுடையவர்கள். சிமெண்ட் மூட்டைகளைச் சேமித்து வைப்பதற்குத் தகுந்த இடவசதி இருப்பதும் அவசியம். ஒரு குறிப்பிட்ட ஊரில், ஒரு சிமெண்ட் நிறுவனத்தின் விற்பனை உரிமையை ஏற்கனவே வேறொருவர் பெற்றிருந்தால் மற்றொருவர் அதே நிறுவனத்திலிருந்து விற்பனை உரிமையைப் பெறுவது கடினம். அந்தப் பகுதியில் சிமெண்ட்டிற்கான தேவை மற்றும் ஏற்கனவே விற்பனை உரிமையைப் பெற்றிருப்பவரின் விற்பனையகத்திற்கும் புதியதாக விற்பனை உரிமை கோருபவரின் விற்பனையகத்திற்கும் உள்ள தூரம் ஆகியவற்றைப் பொறுத்து, சிமெண்ட் நிறுவனம், ஒரு குறிப்பிட்ட பகுதியில் பல விற்பனை உரிமைகள் வழங்கப்படுவது குறித்து முடிவு செய்யும்.
முதலீடு
சிமெண்ட் விற்பனை உரிமையைப் பெறுவதற்கு 50,000 முதல் 5,00,000 இலட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகையாகச் செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறுவனத்தைப் பொறுத்துப் பிற நிபந்தனைகள் அமையும். பொதுவாக இந்தக் காப்பீட்டுத் தொகையை, சிமெண்ட் நிறுவனம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வட்டியுடன் உங்களுக்குத் திருப்பிச் செலுத்திவிடும்.
இடவசதி
குறைந்தது 500 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சிமெண்ட் மூட்டைகளை அதனுடைய தரம் கெடாமல் பாதுகாப்பாகச் சேமித்து வைக்க முடியும். கனரக வாகனங்கள் எளிதாக வந்து செல்லும் வகையிலான இடத்தில் சேமிப்பகம் அமைந்திருப்பது விரும்பத்தக்கது. அப்பொழுதுதான் சிமெண்ட் மூட்டைகளை எளிதாக ஏற்றி இறக்க வசதியாக இருக்கும்.
விற்பனை உரிமையைப் பெற யாரை அணுக வேண்டும்
சிமெண்ட் நிறுவனத்தின் உங்கள் பகுதிக்கான சந்தையில் பிரிவின் செயல் அலுவலரைத் தொடர்பு கொண்டு விற்பனை உரிமைக்கான விவரங்களைக் கேட்க வேண்டும். சிமெண்ட் தயாரிப்பு நிறுவனம் தொடர்பான விவரங்கள், விற்பனை உரிமையைப் பெறும் முறை போன்ற உங்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் இவர் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
வருமான வாய்ப்பு
நீங்கள் விற்பனை செய்யும் ஒவ்வொரு சிமெண்ட் மூட்டைக்கும் குறைந்தது 10 முதல் 15 ரூபாய் வரை உங்களுக்கு இலாபம் கிடைக்கும். சிமெண்ட் நிறுவனத்தின் விற்பனைக் கொள்கைளைப் பொறுத்து இதில் மாற்றம் இருக்கலாம்.
No comments:
Post a comment
Note: only a member of this blog may post a comment.