இன்று ஒவ்வொருவரும் ஒரு தொழிலை செய்து வந்தாலும் ஒரு சிலர் மட்டுமே தங்கள் தொழிலில் வெற்றி அடைகின்றனர். தாங்கள் தேந்தெடுத்த தொழில் வெற்றி அடையாமல் போக பல்வேறு காரணங்கள் இருந்தாலும் தொழிலை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கிய காரணியாகும். முதல் கோணல் முற்றும் கோணல் என்று ஆகிவிடக்கூடாது. நாம் சரியான தொழிலை தேர்ந்தெடுக்க விட்டால் அது நம்மை பல்வேறு வகைகளில் பாதிக்கும் அதுமட்டுமின்றி நம்மை சார்ந்துள்ள குடும்பம் நம் எதிர்காலம் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளது. ஆகவேதான் தொழில் உலகம் குழுவினர் இதில் உங்களுக்கு உதவ தயாராக உள்ளனர்.
எங்களின் குழுவினர் உங்களின் திறமை, அனுபவம் மற்றும் உங்களின் முதலீடு, உங்களின் மனக்குழப்பம், தேர்ந்தெடுத்த ஐடியாக்கள், அவைகளின் இன்றைய மார்க்கெட் நிலவரம், போட்டி, தேவை ஆகியற்றை ஆராய்ந்து தங்களுக்கான தொழிலை தேந்தெடுப்பதில் குழப்பமின்றி உறுதியுடன் தீர்மானம் எடுத்து வெற்றிக்கான பாதையில் களமிறங்கி முன்னேற குறைந்த கட்டணத்தில் உதவுகிறோம்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவ தென்பது இழுக்கு
ஒரு செயலை செய்யுமுன் பலமுறை யோசித்து அதன்பின் அதில் இறங்கி துணிந்து செயல்பட வேண்டும் என்று அனைத்தும் உணர்ந்த நமது திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.
ஆகவே தொழில் உலகம் குழுவினர் உங்களுக்கு சரியான வழியினைக் காட்ட தயாராக உள்ளனர். இதனைப் பயன்படுத்தி தங்களின் பணத்தையும் உழைப்பையும் சரியான தொழில் மற்றும் வெற்றிகரமான தொழிலில் முதலீடு செய்து வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள்!
தொடர்புக்கு:
செல்வம்
ஆசிரியர்
தொழில்உலகம்.காம்
9677464889
No comments:
Post a comment
Note: only a member of this blog may post a comment.