இயற்கையாகக்
கிடைக்கும் ஒரு பொருளை மதிப்புமிக்க
பொருளாக மாற்றினால் வெற்றி நிச்சயம். அந்த
வகையில் வீணாகக் குப்பையில் போடப்பட்டு
வந்த பாக்குமட்டையிலிருந்து சுற்றுபுறச்சூழலைப் பாதிக்காத பிளேட்டுகள் தயாரிக்கப்பட, இப்போது அது மாபெரும்
வரவேற்பைப் பெற்று வருகிறது. விசேஷங்களில்
பெருமளவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
விளைவு வீணான பொருள் விலைமதிப்பிற்குரிய
பொருளாக மாறிவிட்டது.
இதன்
காரணமாக, பாக்கு மட்டை தயாரிக்கும்
தொழில் இப்போது கனஜோராக நடந்து
வருகிறது. சிறுதொழில் செய்ய நினைப்பவர்களுக்கும் குறைந்த
முதலீட்டில் தொழில் செய்ய நினைப்பவர்களுக்கும்
இந்த தொழில் நிச்சயம் கை
கொடுக்கும். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு
ஏதுவான தொழில் இது.
தயாரிக்கும்
முறை!
பாக்கு
மட்டையை சுத்தமான தண்ணீர் தொட்டியில் ஐந்து
முதல் பத்து நிமிடங்கள் ஊற
வைக்க வேண்டும். அதன் பிறகு பிரஷ்ஷினால்
சுத்தம் செய்து அதிலிருக்கும்
அழுக்குகளை அகற்ற வேண்டும். சுத்தம்
செய்யப் பயன்படுத்தும் தண்ணீரில் வேப்ப எண்ணெய் அல்லது
மஞ்சள் தூள் போன்றவற்றை கலந்து கொள்ளலாம்.
இதனால் மட்டைகளில் பூஞ்சை வருவது தடுக்கப்படும்.
பிறகு அந்த மட்டைகளை சூரிய
வெளிச்சத் திலோ அல்லது காற்றிலோ
உலர வைக்க வேண்டும். ஆனால்,
மட்டை காய்ந்து பிளந்துவிடும் அளவுக்கு காய வைக்கக் கூடாது.
பக்குவமான பதத்தில் காய்ந்த மட்டைகளே சரியாக
வரும். காய்ந்த மட்டைகளை இயந்திரத்தில்
கொடுத்து பிரஸ் செய்யும்போது வெப்பத்தினால்
மட்டை பக்குவப்பட்டுவிடும். சூடு தணிந்த பின்பு
பிளேட்டுகளை தேவையான அளவுகளில் இயந்திரத்திலேயே
கட் செய்து எடுத்து, சுத்தம்
செய்தால் விற்பனைக்கு ரெடி!
வேலையாட்கள்!
இந்த
தொழிலுக்கு குறைந்த பட்சம் இரண்டு
முதல் ஏழு நபர்கள் வரை
வேலைக்கு தேவை. பெரும்பாலும்
வீட்டிலிருப் பவர்களை வைத்தே இந்த
தொழிலை செய்துவிடலாம்.
தயாரிக்கப்படும்
அளவுகள்!
12 இஞ்ச்
அளவு கொண்ட பிளேட் கல்யாண
வீடுகளிலும், 10 இஞ்ச் பிளேட்டுகள் வளைகாப்பு
விசேஷங்கள் மற்றும் சுற்றுலா தேவைகளுக்கும்,
8, 6 இஞ்ச் பிளேட்டுகள் கோயில்களில் அன்னதானம் வழங்கவும், 4 இஞ்ச் பிளேட்டுகள் பிரசாதங்கள்
வழங்குவதற்கும் பயன்படுகின்றன.
சாதகங்கள்!
* சுற்றுச்சூழலுக்கு
ஏற்ற பொருள். எந்தவிதமான செயற்கை
வாசமும், கெமிக்கல் கலப்படமும் கிடையாது.
* கையில்
வைத்து சாப்பிடுவதற்கு சுலபமாக இருப்பதால் பார்ட்டிகளிலும்,
பஃபே முறையில் சாப்பிடுவதற்கும் பயன்படுத்தலாம்.
* மைக்ரோவேவ்
அவனில் சமையல் செய்யும்போது உணவுகளை
சூடுபடுத்த இந்த பிளேட்டுகளை பயன்படுத்தலாம்.
* விரும்பிய
வடிவங்களில் தம்ளர், கிண்ணம் போன்ற
வடிவங்களில்கூட இதைத் தயாரிக்கலாம்.
பாதகங்கள்!
மழைக்
காலத்தில் பாக்குமட்டை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே,
மழைக் காலத்திற்கு முன்பே பாக்கு மட்டையை
வாங்கி வைத்துக் கொள்வதன் மூலம் மூலப்பொருள் கிடைக்காமல்
திண்டாடும் நெருக்கடியைத் தவிர்க்கலாம். அத்துடன் மழைக் காலத்தில் பாக்கு
மட்டையில் பூஞ்சைகள் வர வாய்ப்பிருக்கிறது. அதனை
தடுக்கும் விதமாக பாக்கு மட்டைகளை
பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள் கிடைக்கும் இடங்கள், தேவையான முதலீடு தொகை எவ்வளவு?, பைனான்ஸ் கிடைக்குமா?, மானியம் பெறுவது எப்படி? மானியம் எங்கு எப்போது கிடைக்கும்? என்னென்ன இயந்திரங்கள் தேவைப்படும்? பிளேட் விற்பனை விலை நிர்ணயம் மற்றும் சந்தை வாய்ப்பு ஆகிய விபரங்கள் தேவைப்படின் Rs. 250/- மட்டும் ஆன்லைனில் அல்லது வங்கி மூலம் செலுத்தி 30 நிமிடங்களில் தங்களின் இ-மெயிலுக்கு அல்லது மொபைல் Whats App-ல் பெற்றுக் கொள்ளலாம்.
Bank Name : Indian Overseas Bank
Branch Name : Singanallur, Coimbatore - 5
Branch Code : CBS 1844
Current Ac No : 184402000000556
In Favour Of : INFOTECH SOLUTIONS
IFSC Code : IOB A 0001844
Branch Name : Singanallur, Coimbatore - 5
Branch Code : CBS 1844
Current Ac No : 184402000000556
In Favour Of : INFOTECH SOLUTIONS
IFSC Code : IOB A 0001844
தொடர்புக்கு: ஜெயசெல்வன்: Cell: 9566036899
பாக்கு மட்டை பிளேட் தயாரிக்கும் இயந்திரம் வாங்க தொடர்புக்கு: 07373630788
லோன் பெற பிராஜெக்ட் தேவைப்படுபவர்கள் ஆன்லைன் மூலம் Rs.2500/- பணம் செலுத்தி இ- மெயிலில் பெற்றுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.