Search This Website

News Update :

PREMIUM BUSINESS ADS - POST ADS HERE

வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி!

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899
For More Details Click Me

பொருட்களின் விற்பனை வளர்ச்சிக்கு தேவையானவை ( Business Sales ImprovementTips)

Sunday, 25 January 2015

Product, Price, Place, Promotion (4p's) கலவையை, பொருளின் தன்மையை பொறுத்து சரியான விகிதத்தில் பயன்படுத்தி காலத்திற்கு ஏற்ப வியூகம் அமைத்தால் பிராண்ட் மதிப்பு (Brand Value)  நிலைத்திருக்கும். 

www.tholilulagam.com


பொருளை தயாரிக்க பொசிசனிங் எவ்வாறு செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்த பிறகே 4P யை சரியான விகிதத்தில் செயல்படுத்த வேண்டும்.

என்பீல்டு புல்லட் பயன்படுத்துவதை அந்த கால தொழில் அதிபர்களும் நிலக்கிழார்களும் பெருமையாக கருதினார்கள். அதன் வடிவமைப்பும், கம்பீரமும் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும்.

www.tholilulagam.com


நாற்பது ஆண்டுகளைக் கடந்தும் ஒரே என்பீல்டு புல்லட்டை பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஒரு பொருள் பயன்படும்படி வடிவமைத்தால், அதனைத் தயாரிக்கும் நிறுவனம் எவ்வாறு அதிக பொருட்களை விற்று லாபம் சம்பாதிக்க இயலும்? ஆகவேதான் என்பீல்டு இந்தியா நிறுவனம் நட்டத்தில் இயங்கியது. எட்டு ஆண்டுகளுக்கு முன் இந்த நிறுவனத்தை ஈச்சர் (Eicher Group) வாங்கியது.

 நிறுவனத்தை வாங்கிய உடனே சரியான பொசிசனில் ஈடுபட்டது.தொழில் அதிபர்களையும்  இளைஞர்களையும் கவரும் வண்ணம் புல்லட்டை வடிவமைத்து பொசிசன் செய்தது.

www.tholilulagam.com

பொருள் (Product)

பொருளை வடிவமைப்பதற்கு முன் வாடிக்கையாளர்களின் எதிபார்ப்புகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் டிசைன் செய்ய வேண்டும்.

நாம் வடிவைக்கும் பொருளானது தரத்திலும் செயல்பாட்டிலும் சிறந்ததாக இருக்க வேண்டும்.

பேக்கஜ் வடிவமைப்பு உறுதியாகவும் வாடிக்கையாளர்களின் உள்ளம் கவரும் வகையிலும் இருக்க வேண்டும்.

விலை (price)

பொருளை வெற்றிகரமாக தயாரித்தாகி விட்டது. போட்டியாளர் பொருளின் விலை என்ன? என்ன விலை வைத்தால் நம் பொருளை வாடிக்கையாளர் வாங்குவர் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இலாப விகிதம் எவ்வளவு வைக்கலாம்? எவ்வளவு கழிவுகள் கொடுக்கலாம்?  என்பதை ஆய்வு செய்ய வேண்டும். விலை மதிப்பு அதிகமுள்ள பொருளுக்கு இன்ஸ்டால்மெண்ட் வசதி இருந்தால்தான்  வாடிக்கையாளர் நம் பொருளை வாங்க முன்வருவார்கள். சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கேட்ப பொருளின் விலை அமைக்கப்பட வேண்டும்.

 விநியோகம் (Place)

கணினி போன்ற பொருட்களை நேரடியாக விற்பதைவிட விநியோகஸ்தர்கள், மின் வணிக நிறுவனங்களுடன் கூட்டு வைத்து விற்கலாம். மின் வணிக நிறுவனங்கள், இன்வன்டரி மடலுக்கு பதிலாக மார்க்கெட் பிளேஸ் மாடலை பின்பற்றுவதால் வாட் வரி செலுத்த வேண்டியது இல்லை.


விற்பனை மேம்பாடு (Promotion)

ஏற்ற முறையில் விளம்பரம்(Advertisement) செய்யலாம். தற்போது ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்வது மிகவும் பயன் தருகிறது. நேரப் பற்றாக்குறையாலோ, ஆன்லைனில்(Online) விளம்பரம் செய்யத் தெரியவில்லை என்றாலும் நம் தொழில் உலகம் குவினரைத் தொடர்பு கொள்ளலாம். குறைந்த செலவில் தகுதியான இணையத் தளங்களில் விளம்பரம் செய்து தருவார்கள். மேலும் தங்களுக்கென ஒரு வெப்சைட்(Website) துவக்கி அதில் தங்கள் பொருட்களின் விலை, போட்டியாளர் பொருட்களுடன் தங்கள் பொருளின் வித்தியாசம், நன்மைகள், தரம் பற்றிய விபரங்களை போடுவதன் மூலம் தங்கள் நிறுவன மதிப்பை உயர்த்தலாம். ஒருவேளை குறைந்த செலவில் அல்லது தரமான வெப்சைட்டை உருவாக்க விரும்பினால் அதற்கும் தொழில் உலகம் குழுவைத் தொடர்பு கொள்ளலாம்.

 பலரும் வெப்சைட்(Website) எங்களிடம் சில வருடங்களாக உள்ளது. ஆனால் தொழில் சார்ந்த விசாரணைகள் வரவில்லை என குறைபடுவதுண்டு. அதற்கு சர்ச் எஞ்சின் ஆப்டிமைசேசன் செய்ய வேண்டும் அதென்ன SEO என்கிறீர்களா? கூகுள் போன்ற தேடுபொறிகலைத்தான் பொருட்கள் தேவைகளைத் தேட பலரும் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு தேடும்பொழுது நம்முடைய இணையத்தளம் அதில் தென்பட்டால்தான் வாடிக்கையாளர் நம் வெப்சைட்டை கண்டுபிடிப்பார். இல்லையெனில் வேறு நிறுவன இணையத் தளத்திற்கு சென்றுவிடுவார். ஆகவே தேடுபொறிகளிலும், இணைய டைரக்ரிகளிலும் இணைப்பது மிக மிக முக்கியமானது. இதனை நன்கு அனுபவம் வாய்ந்த நிறுவனம்  செய்வதுவே சாலச் சிறந்தது. தங்களுக்கு SEO செய்யவும் தொழில் உலகம் குழுவைத் தொடர்பு கொள்ளலாம்.

 மேலும் தங்களின் வீடியோக்களையும் ஆன்லைனில் தொழில் உலகம் மூலம் விளம்பரம் செய்யலாம். தகவல்களை நேரடியாக பார்த்து புரிந்து கொள்ள வீடியோ விளம்பரங்கள் மிகவும் சிறந்தது.

கூகுளில் விளம்பரம் செய்யவும் தொழில் உலகம் மூலம் விளம்பரம் செய்யலாம்

 இந்த 4 P வியூகத்தை வெளிச் சூழ்நிலை மற்றும் அரசின் கொள்கை முடிவு, வரி விதிப்பிட்கேட்ப மாற்றி அமைத்தால்தான் சந்தையில் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்க முடியும்.

தொழில் உலகம் குழுவைத் தொடர்பு கொள்ள;

E-Mail: tholilulagam@gmail.com

Cell; 0-9566936899


Share this Article on :

No comments:

Post a comment

Note: only a member of this blog may post a comment.

Related Posts Plugin for WordPress, Blogger...
 

© Copyright Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD ) 2010 -2011 | Design by INFOTECH SOLUTIONS | Published by Infotech Solutions Templates | Powered by www.infotechwebs.com.