Search This Website

News Update :

PREMIUM BUSINESS ADS - POST ADS HERE

வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி!

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899
For More Details Click Me

ஹேர் ஆயில் தயாரிப்பு Hair Oil Production - Methods & Details

Friday, 6 December 2013கூந்தல் வளர்ச்சிக்காக,  தலைக்கு மூலிகை எண்ணெய் தேய்க்கும் பழக்கம் பல பெண்களிடம்  உள்ளது. ஆண்களும் முடிகொட்டுதல் போன்ற பிரச்னைகளுக்காக மூலிகை எண்ணெய்களை பயன்படுத்துகிறார்கள். பெரிய பிராண்ட் நிறுவனங்கள் போட்டி களத்தில் இருந்தாலும், தரமான மூலிகை எண்ணெய் தயாரித்து விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்  என்று கூறுகிறார்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த வாளவாடியில் ஹேர் ஆயில் தயாரித்து விற்று வரும் பத்மாவதி. அவர் கூறியதாவது: எனது கணவர், மாமனார் மூலிகை எண்ணெய், தைலம் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நான் மகாத்மா காந்தி மகளிர் சுய உதவி குழுவில் சேர்ந்தபோது, மகளிர் குழுக்களுக்கு வழிகாட்டி வரும் நேசக்கரங்கள் அமைப்பினர் மூலிகை ஹேர்ஆயில்  தொழிலை துவங்கும்படி  கூறினர்.
அதன் பேரில்  கடந்த 3 ஆண்டு களாக மூலிகை ஹேர் ஆயில், ஓம வாட்டர், ரோஸ் வாட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வரு கிறேன். அவற்றை கணவர் உதவியுடன் விற்று வருகிறேன். ஹேர் ஆயில் 3 ஆண்டு வரை கெடாது. நீண்ட நாள் ஸ்டாக் வைத்துகூட விற்கலாம். மாதம் ரூ.2 லட்சத்துக்கு ஹேர் ஆயில் விற்று வருகிறேன். வீட்டில் இருந்தபடியே பெண்கள் செய்ய ஏற்ற தொழில் இது. ஹேர் ஆயிலை மசாஜ் எண்ணெயாகவும் பயன்படுத்தலாம் என்பதால் நல்ல வரவேற்பு உள்ளது

www.tholilulagam.com

உற்பத்தி செலவு
ஹேர் ஆயில் தயாரிக்க தேவையான தேங்காய் எண்ணெய் கிலோ ரூ.180,  வெந்தயம் கிலோ ரூ.60, சீரகம் கிலோ ரூ.60, கஸ்தூரி மஞ்சள் கிலோ ரூ.110, பூலாங்கிழங்கு கிலோ ரூ.200, வெட்டிவேர் கிலோ ரூ.140, விளாமிச்சை வேர் கிலோ ரூ.180, கருவேப்பிலை கிலோ ரூ.20, பொன்னாங்கண்ணி கிலோ ரூ.10, கீழாநெல்லி வேர் ரூ.12,  திருநீற்று பச்சிலை, கரிசலாங்கண்ணி, சோற்று பச்சிலை, நெல்லி, சோற்று கற்றாழை ஆகியவை கிலோ ரூ.30 வரை விற்கிறது.  பாட்டில்கள் 30 மி.லி முதல் 60 மி.லி அளவு வரை ரூ.5, 100 மி.லி அளவு ரூ.5.50, 500 மில்லி அளவு ரூ.6, ஒரு லிட்டர் அளவு ரூ.6.50க்கு கிடைக்கிறது.  அடுப்பு எரிக்க விறகு அல்லது எரிவாயு, மூலிகை மற்றும் பச்சிலைகள், உற்பத்தி கூலி செலவு உள்பட ஒரு லிட்டர் ஹேர் ஆயில் தயாரிக்க ரூ.400 செலவாகும். ஒரு நாளில் ஒரு நபர் 20 லிட்டர் ஹேர் ஆயில் தயாரிக்கலாம். அதற்கு ரூ.8 ஆயிரம் தேவை. ஒரு மாதத்தில் 25 நாளில் 500 லிட்டர் தயாரிக்க ரூ.2 லட்சம் தேவை. வருவாய்: ஹேர் ஆயில் 30 மி.லி, 60 மி.லி, 100மி.லி அளவுகளில் விற்பனை செய்யலாம். ஒரு லிட்டர் ரூ.525க்கு கடைக்காரர்களுக்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் உற்பத்தியாளருக்கு லிட்டருக்கு ரூ.125 லாபம். ஒரு மாதத்தில் 500 லிட்டர் ஹேர் ஆயில் விற்பனை மூலம் லாபம் ரூ.62,500.

கட்டமைப்பு: மூலிகை காய்ச்ச விறகு அடுப்பு அல்லது பெரிய பர்னர் உள்ள கேஸ் சிலிண்டர் அடுப்பு, தைலத்தை பாட்டிலில் ஊற்றி பேக்கிங் செய்து இருப்பு வைக்க ஒரு அறை, பச்சிலைகள் வளர்க்க 10க்கு 10 அடி நீள, அகல காலி இடம் (வீட்டு முற்றமாக கூட இருக்கலாம்), அதே அளவில் மூலிகை பொருட்களை காய வைக்க திறந்த வெளி தேவை. மூலப்பொருட்கள்:ஆட்டு உரல் அல்லது கிரைண்டர், மூலிகை காய்ச்ச இரும்பு சட்டி, காய்ச்சிய தைலத்தை ஊற்றி வைக்க காலி டின்கள். உற்பத்தி பொருட்கள் : ஹேர் ஆயில் பேக்கிங் செய்ய 30 மி.லி, 60 மி.லி, 100 மி.லி உள்ளிட்ட பல்வேறு கொள்ளளவுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள்,  லேபிள்கள் மற்றும் உற்பத்திக்கு தேவையான மூலிகை, பச்சிலை.

கிடைக்கும் இடம் : காலி டின்கள் ஹார்டுவேர்ஸ் கடைகளிலும், மூலிகை மற்றும் பச்சிலை நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கிராமப்புறங்கள் மற்றும் மலைபகுதிகளில் இருந்தும் மூலிகை, பச்சிலைகளை பெறலாம். விற்பனை வாய்ப்பு: டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், நாட்டு மருந்து கடைகள், மளிகை கடைகள், கூட்டுறவு கடைகள் ஆகியவற்றில் ஹேர் ஆயில் விற்கப்படுவதால் அங்கு சப்ளை செய்யலாம். தெரிந்தவர்கள், அருகில் இருப்பவர்களிடம் நாமே நேரடியாக விற்கலாம். நல்ல தரத்தோடு தயாரிக்கும் போது பலன் நன்றாக தெரியும்.

விலையும் ஏற்றபடி இருந்தால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். அதற்கேற்ப விற்பனை அதிகரிக்கும். நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். பயிற்சி தேவை இல்லை: ஹேர் தயாரிப்புக்கு என பெரிதான பயிற்சி தேவை இல்லை.

சமையலில் பக்குவம் பார்த்து சமைக்கும் பெண்கள், எளிதில் ஹேர் ஆயில் தயாரிக்கும் முறை கற்றுக் கொள்வார்கள். சில முறை பார்த்தாலே போதும். மகளிர் சுய உதவிக்குழுக்கள்,

வாழ்ந்து காட்டுவோம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்களுக்கு சுய தொழில் துவங்க வழிகாட்டப்படுவதால், அவற்றின் மூலம் மூலிகை எண்ணெய் தொழிலை மேற்கொள்ள வங்கி கடன் பெற வாய்ப்புள்ளது.

தயாரிப்பது எப்படி?

தலா 50 கிராம் வெந்தயம், சீரகம், கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, வெட்டி வேர், விளாமிச்சை வேர் ஆகியவற்றை 24 மணி  நேரம் ஊறவைத்து, தண்ணீர் வடித்து எடுத்து கொள்ள வேண்டும். தலா 50 கிராம் கருவேப்பிலை, திருநீற்று பச்சிலை, பொன்னாங்கண்ணி, கீழாநெல்லிவேர், கரிசலாங்கண்ணி, நெல்லி சாறு, செம்பருத்தி ஆகியவற்றை சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் எடுத்து கொள்ள வேண்டும். 50 கிராம் கற்றாழை ஜெல் எடுத்து கொள்ள வேண்டும். அனைத்தையும் ஆட்டு உரல் அல்லது கிரைண்டரில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்க வேண்டும். உளுந்த மாவு பதத்துக்கு வந்தவுடன் அதை வடை போல் தட்ட வேண்டும்.

இரும்பு சட்டியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் அதில் வடை போல் தட்டியதை போட வேண்டும். அவை எண்ணெயில் வெந்து உதிரும். சாறு முழுவதும் எண்ணெயில் இறங்கி கலந்து விடும். எண்ணெய் ஈரப்பதம் இல்லாத நிலைக்கு மாறிவுடன் தீயை அணைத்து விட வேண்டும். சூடு ஆறியதும் எண்ணெயை வடிகட்டி தகர டின்னில்

ஊற்றினால் ஹேர் ஆயில் தயார். எண்ணெயை தேவையான அளவுள்ள பாட்டில்களில் அடைத்து, லேபிள் ஒட்டி விற்கலாம்.

பக்குவம் முக்கியம்: கொதிக்கும் எண்ணெயில் வடைபோல் போட்டவற்றை முறுகும் வரை வேக வைத்து விட்டால், வடையின் துகள்களே எண்ணெயை உறிஞ்சி கொள்ளும். எண்ணெய் அளவு குறைந்து விடும். முறுகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சீக்கிரமே தீயை அணைத்து விட்டால் முழுமையான மூலிகை எண்ணெயாக மாறாது.  எண்ணெய் முழுவதும் மூலிகை எண்ணெயாக மாறிவிட்டதை அறிய, வடை வெந்து கொண்டிருக்கும் போது, ஒரு திரியை சட்டியில் உள்ள எண்ணெயில் நனைத்து பற்ற வைக்க வேண்டும். எண்ணெய் ஈரப்பதமாக இருந்தால் சடசடவென சத்தம் வரும். சரியாக எரியாது. திரி சத்தமில்லாமல் எரிந்தால் மூலிகை எண்ணெய் பக்குவத்திற்கு வந்து விட்டது என்பதை அறிந்து உடனே தீயை அணைத்து விடலாம்.

கூந்தல் வளர்ச்சிக்காக,  தலைக்கு மூலிகை எண்ணெய் தேய்க்கும் பழக்கம் பல பெண்களிடம்  உள்ளது. ஆண்களும் முடிகொட்டுதல் போன்ற பிரச்னைகளுக்காக மூலிகை எண்ணெய்களை பயன்படுத்துகிறார்கள். பெரிய பிராண்ட் நிறுவனங்கள் போட்டி களத்தில் இருந்தாலும், தரமான மூலிகை எண்ணெய் தயாரித்து விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்  என்று கூறுகிறார்

Share this Article on :

No comments:

Post a comment

Note: only a member of this blog may post a comment.

Related Posts Plugin for WordPress, Blogger...
 

© Copyright Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD ) 2010 -2011 | Design by INFOTECH SOLUTIONS | Published by Infotech Solutions Templates | Powered by www.infotechwebs.com.