Search This Website

News Update :

PREMIUM BUSINESS ADS - POST ADS HERE

வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி!

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899
For More Details Click Me

விளம்பரங்கள் - வெற்றிக்கு வழி

Sunday, 22 December 2013

தொழில் முனையும் பலரும் தங்களுக்கான சந்தையினை தேர்ந்தெடுப்பதிலும் அதனை முறையாக சந்தைப்படுத்துதலிலுமே தங்களது முழு வெற்றியினை தீர்மானம் செய்ய முடியும். அத்தகைய சந்தைப்படுத்துதல் (Marketing) எனும் விளம்பர உலகம் பற்றி முழுமையாக தெரிந்து செயல்படுவது அவசியமாகும்.

     பொதுவாக நமக்கான சந்தையை தீர்மானம் செய்த பிறகு எத்தகைய முறையில் அதனை மக்களிடம் கொண்டு செல்கிறோம் என்பதை பொறுத்தே ஒரு நல்ல விளம்பரமாவது அமைகிறது. முதலில் நாம் தீர்மானிக்க வேண்டியது

ஒரு நல்ல விளம்பரமாவது,

    என்ன பொருள்
    எத்தைகைய வாடிக்கையாளர்
    எந்த சூழல் 
    வெளிப்படுத்தும் விதம்
    சென்றடையும் விதம்


போன்ற கூறுகளின் அடிப்படையிலே அமைகிறது

    என்ன பொருள்

      எத்தைகய பொருளை நாம் சந்தை படுத்துகிறோம் என்பதை மனதினில் கொண்டே நமது விளம்பரம் இருக்க வேண்டும். உதாரணமாக நாம் விற்பனை செய்யும் பொருளுக்கான மார்க்கெட் வேல்யூ ஆனது எத்தகைய நிலையில் உள்ளது, என்பதை கொண்டே நமது பொருளை விறபனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
     பொதுவாக இன்சூரன்ஸ் முகவர்கள் மற்றும் பிற எம்.எல்.எம் பிஸினஸ் செய்பவர்களுக்கு இந்த விதியானது சிறந்த முறையில் பொருந்தும், ஏனெனில் அவர்களது சந்தைப்படுத்தும் திறனானது மிகவும் உற்று நோக்க கூடிய ஒன்று. எத்தகைய பொருளை அவர்கள் விற்பனை செய்ய எண்ணுகிறார்களோ அதனை பற்றிய முழுமையான அறிவை அவர்கள் கொண்டிருப்பார்கள். அவர்களின் விற்பனையில் எத்தகைய வாடிக்கையாளர்களையும் தங்களின் பொருள் பற்றிய முழுமையான அறிவின் மூலம் வாங்கச் செய்திடும் வல்லமை பொருந்தியவர்கள்..

  பொருள் பற்றிய போதிய அறிவு இல்லாமல் செய்யப்படும் விளம்பரமாவது மக்களை சென்றடையாது.

 உதாரணமாக நீங்கள் ஒரு கைபேசியை சந்தை படுத்த விரும்பினால் அதன் தன்மைகளை மேலும் அதன் செயல்பாடுகள் குறித்தான விபரங்களை வாடிக்கையாளர்களிடம் முறையாக எடுத்து செல்லும் படியாக விளம்பரத்தினை தயார் செய்ய வேண்டும்.

    கேமரா, புளூடூத், mp3, டபுல் சிம் வசதி போன்ற முக்கிய மேன்மைகளை அடங்கிய கைபேசியானால் அதனை தெளிவாக மக்கள் புரிந்துகொள்ளும் விதமாக உங்களது விளம்பரமானது அமையப்பெற வேண்டும்.

    எத்தைகைய வாடிக்கையாளர்

       பொருள் பற்றிய போதிய அறிவு மட்டும் போதாது அதை வாங்க்கூடிய வாடிக்களையாளர்கள் பற்றின கண்ணேட்டமாவது மிகவும் அவசியமாகும்.  அதாவது குழந்தைகளுக்கான பேபி புட், அல்லது நேப்கின்களுக்கான விளம்பரத்தினை கல்லூரி மாணவர்களுக்க சொல்ல வேண்டும்..../

   இது போல ஒரு சில அடிப்படை கட்டமைப்பு பற்றிய அறிவினை தெளிவாக புரிந்துகொண்டு அதை திறம்பட செயல்படுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு பெண்களுக்கான பேசியல் கிரீம் பற்றிய விளம்பரம்
தந்தை மேக்கப் மேனாக பணி புரிவார். அவரை மரியாதை குறைவாக நடிகை நடத்துவதை காணும் அவரது மகள் தன்னையும் நடிகையாக்க ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் கிரீம் மட்டுமே போதும் என்றும் அவளே சிறந்த அழகுடன் அவர்டு வாங்குவதாக வெளியிடப்பட்ட விளம்பர படமானது முற்றிலும் பெண்களுக்கானது ஆகும்.

  இதில் மிகவும் சுவாரசியமான விசயம், பெண்களுக்கே உரிதான சில பொறாமை குணங்களும் மற்றும் அவர்களின் பாச உணர்ச்சியினையும் கூட விளம்பரத்தில் காண்கிறோம். இது பொருள் மேல் இனம்புரியாத கவர்ச்சி மட்டுமல்லாது அதனை முற்றிலும் உணர்வு பூர்வமாக அனுகும் ஆலுமையை அந்த விளம்பரமானது கொண்டிருக்கிறது.

   ஒரு நல்ல விளம்பரமானது தங்களது வாடிக்கையாளர்களின் குணாதியசயங்களுடன் தன்னை சிறந்த நண்பனாக இருக்கும்படி அமையப் பெற வேண்டும்

    எந்த சூழல் 

எந்த கால நிலை என்பது ஒன்றுமில்லை..

     உப்பு விற்க போனேன் மழை வந்தது
    மாவு விற்க போனேன் காற்றடித்தது

என்ற வரிகளில் தெரிந்துகொள்ளலாம்....

     தெளிவாக சொல்லுங்கள் என்கிறீர்களா....


அட என்னங்க நம்ம அரசியல் தலைவர்கள் எப்படி சரியாக தேர்தல் நேரத்தில் மட்டும் தெளிவாக மக்கள் கண்களுக்கு தெரிகிறார்களோ அதுதாங்க சிறந்த விளம்பரம்..

 எடுத்துகாட்டாக வெயில் காலங்களில் ஏசி பற்றிய விளம்பரத்தினை அதிக அளவில் காணலாம்..    வெளிப்படுத்தும் விதம்

இது கமர்சியலா அது எப்படி இருக்குங்கறத பொருத்து இருக்கு.. விளம்பரத்தினை மேலும் மெருகூற்றும் எக்ஸ்ட்ரா பிரசன்டேசன் தான் வெளிப்படுத்தும் விதமாகும்.

  ஒரு சிறிய கருவை வைத்துக்கொண்டு அதை பதிய வைக்க மேற்கொள்ளப்படும் உத்திகளில் மக்கள் கண்களுக்கு அழகு பட கான்பிக்கப்பட வேண்டுமல்லவா...

பொதுவாக மக்கள் ரசனைக்கேற்ற வகையில் கற்பனை செய்யப்படும் விளம்பரங்களே அதிக அளவில் தங்களது வேலைகளை திறம்பட செய்கின்றன்..

Share this Article on :

No comments:

Post a comment

Note: only a member of this blog may post a comment.

Related Posts Plugin for WordPress, Blogger...
 

© Copyright Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD ) 2010 -2011 | Design by INFOTECH SOLUTIONS | Published by Infotech Solutions Templates | Powered by www.infotechwebs.com.