Search This Website

News Update :

PREMIUM BUSINESS ADS - POST ADS HERE

வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி!

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899
For More Details Click Me

மெழுகுவர்த்தி தயாரிப்பு - சுய தொழில் Candle Production - Tips of Self Employment

Tuesday, 10 December 2013

மெழுகுவர்த்தி தயாரிக்கும் கலை பழமையானது. அன்று தொடங்கி இன்று வரை மெழுகுவர்த்திக்கு மக்கள் மத்தியில் நல்ல கிராக்கி உள்ளது. வழிபாடு, மின்தடை நேரங்களில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது மெழுகுவர்த்தியை தான். எனவே இதை தயாரிக்கும் தொழிலை மேற்கொண்டால் வாழ்வே வெளிச்சமாகும்‘ என்று கூறுகிறார் ஈரோடு ‘அம்மன் கேண்டில் ஒர்க்ஸ்‘ உரிமையாளர் மகேஸ்வரி. அவர் கூறியதாவது: குறைந்த முதலீட்டில் எளிதாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தேன். மெழுகுவர்த்தி தயாரித்து விற்கலாம் என முடிவு செய்து 10 நாட்களில் தொழிலை கற்றுக்கொண்டேன்.
படிப்படியாக தொழிலில் உள்ள நுணுக்கங்களை தெரிந்து கொண்டேன். முதலில் வீட்டுக்கு அருகில் உள்ள மளிகை கடைகளில் ஆர்டர்கள் பெற்று அதற்கேற்ப தயாரித்து விற்றேன். படிப்படியாக டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் உள்பட பல்வேறு இடங்களில் விற்க துவங்கினேன். தொழில் விரிவடைந்ததோடு நல்ல வருமானமும் கிடைத்தது. பிறகு மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க தொடங்கினேன். தற்போது பல பெண்கள் என்னிடம் பயிற்சி பெறுகிறார்கள். வீட்டில் உள்ள பெண்கள் இத்தொழில் மூலம் தங்கள் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.இதில், வேலைப்பளு குறைவு. குறைந்த முதலீடு, இட வசதி போதுமானது. ஒருவர் மட்டும் உழைத்தாலே போதும். வீட்டிலேயே இதை நல்ல முறையில் நடத்த முடியும். தினமும் குறைந்தது 5 கிலோ, அதிகபட்சம் 25 கிலோ மெழுகுவர்த்தி தயாரிக்க முடியும். இதற்கு ஹேண்ட் மெஷின், செமிஆட்டோமெடிக் என்ற இரு வகை மெஷின்கள் உள்ளது. ஹேண்ட் மெஷின் ரூ.500 முதல் விற்பனை செய்யப்படுகிறது. செமி ஆட்டோமெடிக் மெஷின் வாங்க ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. செமி ஆட்டோமெடிக் மூலம் நாள் ஒன்றுக்கு 75 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். தொழில் தொடங்க, வங்கிகளில் எளிதாக கடன் பெற முடியும்.பிரதமர் சுயவேலைவாய்ப்பு திட்டம், கதர் கிராம தொழில் வாரியம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்றவற்றில் 35 சதவீத மானியத்தில் வங்கி கடன் எளிதாக பெற முடியும். கிராமமாக இருப்பின் கடன் தொகையில் 35 சதவீதமும், நகர்ப்புறமாக இருப்பின் 25 சதவீதமும், பெண்களுக்கு 35 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கடன் கிடைக்கிறது. ரூ.2 லட்சம் வரை வங்கிகளில் எந்தவித கேரண்டியும் கேட்பதில்லை. இவ்வாறு மகேஸ்வரி கூறினார்.என்னென்ன தேவை?

பெட்ரோல் கழிவில் இருந்து கிடைக்கும் மெழுகு, காட்டன்நூல், அச்சு, அலுமினிய டிரே, மெழுகு ஊற்றுவதற்கான கோப்பை, கட் செய்ய சிறிய கத்தி, மெழுகு உருக்க அடுப்பு, அச்சில் மெழுகு ஒட்டாமல் இருக்க தேங்காய் எண்ணெய், கலர் வருவதற்கு புளோரிசன் கெமிக்கல், தண்ணீர் ஊற்றுவதற்கான பக்கெட், பேக்கிங் செய்வதற்கான பாலிதீன் கவர்கள்.


தயாரிக்கும் முறை

கடைகளில் கிடைக்கும் மெழுகை வாங்கி வந்து ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு சூடேற்ற வேண்டும். அச்சில் மெழுகு ஒட்டாமல் வருவதற்கு தேங்காய் எண்ணெயை லேசாக தடவவேண்டும். சூடேற்றிய மெழுகை அச்சில் ஊற்ற வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து மெழுகு ஊற்றப்பட்ட அச்சை வாளி தண்ணீரில் போட வேண்டும். சூடாக இருந்த மெழுகு மற்றும் அச்சு குளிர் நிலைக்கு வந்ததும், அச்சில் இருந்து மெழுகுவர்த்திகளை ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும். மெழுகுவர்த்தியை நீளமாக தான் உருவாக்க வேண்டும் என்று இல்லை. எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்.வெள்ளை கலரில் மட்டுமல்ல; எந்த வண்ணத்தில் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். என்ன வண்ணம் தேவைப்படுகின்றதோ அதற்கு ஏற்ற கலர் கெமிக்கல்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். இவற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து மெழுகில் சேர்த்தால் வண்ண மெழுகுவர்த்தி கிடைக்கும்.ரகங்கள்

லோக்கல், வெள்ளை, கலர், கப், சிலை, ஜெல் என ஏராளமான வகைகளில் மெழுகுவர்த்திகள் உள்ளன. லோக்கல் என்பது நீளமாக இருக்கும் மெழுகுவர்த்தியை குறிக்கிறது. ஒவ்வொரு வகைக்கும் அச்சுகள் உள்ளது. அவற்றின் மூலம் பல்வேறு வகைகளில் தயாரிக்கலாம்.முதலீடு

1 கிலோ மெழுகு தற்போது கடைகளில் ரூ.95க்கு விற்கப்படுகிறது. அச்சு வாங்க ரூ.500, டிரே ரூ.100, தேவையான எரிபொருள், பக்கெட் ரூ.50, காட்டன் நூல் (திரி) ஒரு கிலோ ரூ.120, கை மெஷின் ரூ.300. எடை போடுவதற்கான எலக்ட்ரானிக்ஸ் தராசு ரூ.400 என மொத்தம் ரூ.1,600 இருந்தால் போதுமானது.

வர்த்தக வாய்ப்பு

உற்பத்தி செய்த மெழுகுவர்த்திகளை மளிகை கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்களை அணுகி ஆர்டர்கள் பெற்று விற்கலாம். மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்வதற்காக தனியே கடைகளும் உள்ளன. சர்ச்களிலும் ஆர்டர்கள் பெற முடியும்.வருமானம்

ஒரு கிலோ மெழுகு ரூ.95க்கு கடைகளில் கிடைக்கிறது. இதை மெழுகுவர்த்தியாக தயாரித்து ஒரு கிலோ ரூ.120க்கு விற்கலாம். பெரும்பாலும் கடைகளுக்கு கிலோ கணக்கில் மட்டுமே விற்கப்படுவதால் ஒரு கிலோ விற்றால் ரூ.25 லாபம் கிடைக்கிறது. திரி தயாரிக்க பயன்படும் காட்டன்நூல், பேக்கிங் செய்வதற்கான பாலிதீன் கவர்கள் ஆகியவற்றுக்கு ஆகும் செலவும் குறைவு. ஒரு நாளைக்கு சாதாரணமாக 20 கிலோ வரை மெழுகுவர்த்திகள் தயாரிக்கலாம். ஒரு கிலோவுக்கு ரூ.25 லாபம் கிடைக்கிற நிலையில் 20 கிலோவுக்கு ரூ.500 வரை வருமானம் கிடைக்கிறது. பேக்கிங் செலவு, பாலிதீன் கவர்கள், காட்டன் நூல் செலவு உள்ளிட்டவற்றை கழித்தால் ரூ.450 வரை உறுதியாக லாபம் ஈட்ட முடியும். ஆர்டர்கள் தொடர்ந்து கிடைத்தால் மாதம் ரூ.13,500 வரை லாபம் ஈட்ட முடியும்.

டிப்ஸ்: திரி மூழ்காதவாறு தண்ணீரில் வைத்தால், 2 மணி நேரம் எரியும் மெழுகுவர்த்தி 3 மணி நேரம் எரியும்.


Share this Article on :

No comments:

Post a comment

Note: only a member of this blog may post a comment.

Related Posts Plugin for WordPress, Blogger...
 

© Copyright Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD ) 2010 -2011 | Design by INFOTECH SOLUTIONS | Published by Infotech Solutions Templates | Powered by www.infotechwebs.com.