Search This Website

News Update :

PREMIUM BUSINESS ADS - POST ADS HERE

வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி!

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899
For More Details Click Me

வீட்டிலிருந்தபடியே இணையம் வழியாக குடும்ப பெண்களும் ஏற்றுமதி நிறுவனம் நடத்தலாம். Run the Export Company Through Internet

Monday, 16 January 2012

மதுரை : ""சாதாரண முதலீடு, குறைந்தபட்ச ஆங்கில அறிவு இருந்தால் இன்டர்நெட் மூலம் ஏற்றுமதி தொழிலில் ஜெயிக்கலாம்'' என மதுரை பிருந்தா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன உரிமையாளர் ஸ்ரீதேவி தெரிவித்தார். சென்னை அளவு மதுரையில் பெண்கள் தொழில் துறையில்
முன்னேறவில்லை. படித்திருந்தாலும் தயக்கம் காரணமாக அவர்களின் திறன் வீட்டோடு முடங்கிப் போகிறது. தகவல் தொழில் நுட்பம் பெருகிவிட்ட தற்காலத்தில் வீட்டில் இருந்தபடியே இன்டர்நெட் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து நிறைய சம்பாதிக்கலாம். சுறுசுறுப்பாக குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, இன்டர்நெட் மூலமே ஏராளமாக சம்பாதிக்கலாம் என்கிறார் "சாதனை ஏற்றுமதியாளர்' ஸ்ரீதேவி.

 "சாதனை பெண் தொழிலதிபர்களின் புத்தாண்டு கனவு' பேட்டி
வெளியானது. அதில் ஸ்ரீதேவி, பெண்கள் வீட்டில் இருந்தே சம்பாதித்து சாதிக்கலாம் என்று நம்பிக்கை ஊட்டியிருந்தார். இதனை தொடர்ந்து அவரை ஏராளமான வாசகிகள் தொடர்பு கொண்டு பாராட்டினர். தொழில்முனைவோர் ஆகும் கனவுடன் அலுவலகத்திற்கும் பல வாசகிகள் பேசினர். 

*அவர்களுக்காக ஸ்ரீதேவியின் விசேஷ பேட்டி:* எத்தொழிலையும் துவங்க அவசியத் தேவை

தன்னம்பிக்கை, தைரியம், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம்தான். உள்ளூரில் தொழில் நடத்துவோருக்கு வாடிக்கையாளர்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஏற்றுமதியாளர்களுக்கு முகம் தெரியாத வாடிக்கையாளர்களை, இன்டர்நெட், போன் மூலம்தான் தொடர்பு கொள்ள முடியும். எனவே முன்யோசனை, கடின உழைப்பு, விடாமுயற்சி அவசியம்.

ஆங்கிலத்தில் கடிதம் எழுத, வாசிக்க தெரிந்தால் போதும். குறைந்தபட்சம் ஒரு
கம்ப்யூட்டர், இன்டர்நெட் இணைப்பு என 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய்
முதலீடு தேவை. உலகத்தையே வீட்டுக்குள் கொண்டு வரும் "இன்டர்நெட்'டில் "பிசினஸ் டூ பிசினஸ்' சைட்டுக்குள் நுழைந்து பொறுமையாக தேடினால் வெளிநாட்டு "ஆர்டர்'களையும், அட்வான்சாக பொருளுக்கான தொகையையும் இ மெயில் மூலம் பெறலாம். பொருட்களை அனுப்பி சம்பாதிக்கலாம். ஏற்றுமதியாளராக முடிவு செய்துவிட்டால் முதலில் வங்கியில் நடப்புக் கணக்கு, வருமான வரித்துறையின் "பான்' கார்டு,
மத்திய வர்த்தக துறையின் ஐ.சி.சி.,எனும் "ஏற்றுமதி, இறக்குமதி கோடு',
வணிகவரித்துறையின் "டின்' நம்பர் பெறவேண்டும்.

இன்டர்நெட்டில் www.tradeindia.com மற்றும் www. <http://www.tradezone.com/>
tradezone.com போன்ற பல பிசினஸ் சைட்கள் உள்ளன. இதில் எந்த நாட்டில், எந்தெந்த நிறுவனங்களுக்கு என்னென்ன பொருளுக்கு தேவை உள்ளது. அவற்றின் சைஸ், அளவு, நிறம் என அனைத்து விபரங்களும் கிடைக்கும். அதற்கேற்ற பொருளை நாம் அனுப்ப முடியுமா என பார்க்க வேண்டும். அது ஆண்டு முழுவதும் தேவையுள்ளதாக, நம்பகுதியில் கிடைப்பதாக இருந்தால் நல்லது. ஏற்றுமதிக்கான அரசு சலுகை பெற "எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில்' அமைப்பில் உறுப்பினராக சேர வேண்டும். (உதாரணமாக விவசாயம் சார்ந்த பொருள் எனில் "அபேதா', காபி எனில் "காபி போர்டு' போன்ற அமைப்புகள் பல உள்ளன.)

பின்பு பொருளை நமக்கு சப்ளை செய்யக் கூடிய தகுதியான சப்ளையர்களை (தயாரித்து தருபவர்) தேட வேண்டும். இத்தொழிலின் வெற்றியில், பொருளை தேர்வு செய்வதும், தகுதியான சப்ளையரை தேர்வு செய்வதும் சமபங்கு வகிக்கிறது. பொருளை தேர்வு செய்து, இ மெயில் மூலமே "கொட்டேஷனை' வெளிநாட்டு நிறுவனத்திற்கு அனுப்பலாம். அந்நிறுவனம் நம்மை தேர்வு செய்தபின், நாம் பொருளை அனுப்ப வேண்டும்.

இதற்கிடையில் அந்த வெளிநாட்டு நிறுவனத்தின் உண்மை தன்மை குறித்து நம்மூரில் உள்ள "எக்ஸ்போர்ட் கிரடிட் கேரண்டி கார்ப்பரேஷன்' அமைப்பில் குறைந்த கட்டணம்
செலுத்தி அறிந்த பின் பொருளை அனுப்பலாம். இந்த பிசினஸில் முக்கியமானது நேரம் தவறாமை, இமெயில் கடிதங்களுக்கு உடனுக்குடன் பதில் தருவது மிகமிக முக்கியம். இதற்கு நம் தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு அமைத்துக் கொள்ள வேண்டும்.

வெளிநாட்டு நிறுவனங்கள் நம்மிடம் கேட்கும் பொருளை, அவர்கள் கேட்டபடி தரம் மாறாமல், குறித்த காலத்தில் வழங்கும்போது நமக்கு தொடர்ந்து ஆர்டரை
பெற்றுத்தரும். பொருட்களை உலகின் எப்பகுதிக்கும் ஏற்றுமதி செய்ய "கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்டு'கள் உள்ளனர். மதுரையை பொறுத்தவரை பூக்கள், இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் பொருட்களின் ஏற்றுமதி அதிகமாக உள்ளது. அவை சார்ந்த பொருட்களில் பிசினஸ் செய்யலாம். 
Share this Article on :

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Related Posts Plugin for WordPress, Blogger...
 

© Copyright Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD ) 2010 -2011 | Design by INFOTECH SOLUTIONS | Published by Infotech Solutions Templates | Powered by www.infotechwebs.com.