Search This Website

News Update :

PREMIUM BUSINESS ADS - POST ADS HERE

வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி!

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899
For More Details Click Me

வெற்றி என்பது வானத்து நட்சத்திமல்ல; உள்ளங்கை ரேகைதான்!

Tuesday, 10 January 2012

கைத் தொழில்கள், சிறுதொழில்கள் மூலம் பெரிய தொழிலதிபர்கள் பலர் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சுமங்கலி ஊதுபத்தீஸ் உரிமையாளர் திரு.தண்டபாணியும் ஒருவர். சிறிய அளவிலிருந்து பெரிய அளவை எட்டிப் பிடித்ததற்கு காரணம் கடின உழைப்பும்,
நேர்மையும் என்கிறார்.

நல்ல மனமிருந்தால் மார்க்கமுண்டு, போட்டிகளைச் சமாளிக்கும் திறமையும், பொறுமையும் இந்த தொழிலில் வெற்றியைத் தரும். ஊதுபத்தியின் வாசம், வாழ்க்கையிலும் வீசுமா என்ன?

சுமங்கலி ஊதுபத்தி நீலகிரி, சேலம், திருப்பூர், கோபி, ஈரோடு என பல இடத்திலும் தனது உழைப்பின் கிளைகளை பரவவிட்டுள்ளது.

உழைப்பு யாரையும் கைவிட்டதில்லை என்கிறார் திண்டுக்கல் “ஸ்கை ப்ளூஸ்” காட்டேஜ் இண்டஸ்ட்ரியஸின் ஏ.வீ.ஆர், கார்த்திகேயன், சிறு வாசனை சுண்ணாம்பு, ரப்பர் ஸ்டாம்பு இங்க் போன்ற பல்வேறு தொழில்களின் உற்பத்தியாளர். பல தொழில்களுக்கு பயிற்சியும் தருகிறார் இவர். ஒரு நல்ல பலனை, தான் மட்டுமே அனுபவிக்காமல் அதனை மற்றவர்களுக்கும் கற்றுத்தருவதே திருப்தி தருகிறது என்கிறார்.

ஊதுபத்தியின் வாசம், வாழ்க்கையிலும் என்ன?

“கலை வளர்க்கும் தொழில்கள் காசு தராது; கவலைகள் தான் தரும்” எனும் நிலை மாறிக் கொண்டுதான் இருக்கிறது. 

சாலைகளின் ஓரத்தில் கண்ணைக் கவரும் குஜராத் மண் சிற்பங்கள் பார்ப்பவரை வாங்கத் தூண்டுகிறது. கலை நேர்த்தியுன், விதவிதமான வினாயகர் சிலைகள், பறவைகள், பூந்தொட்டிகள் என செய்து தம் கையே தனக்குதவி என்பதுபோல பெரிய கடைகளுக்கு ஆர்டரின் பேரில் அனுப்பிக்கொண்டிருக்கிறார் குஜராத் மாநில தரகோட்டாவை சார்ந்த திரு. ஜஷவா.

குளிரூட்டப்பட்ட அறையில் ஆள் புதையும் சோபாக்களுக்கு மத்தியில் மிக எளிமையான பிரம்பு சேர்களும் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகின்றன. இந்த ஈச்சங் குச்சிகள் ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்படுகின்றன.

பலவித வடிவங்களில் நாற்காலிகளும், மோடாக்களும், பூக்கூடைகள், தொங்கும் ஊஞ்சல்கள் என கலை அம்சத்துடன் விற்பனையில் இருக்கின்றன. முறையான பயிற்சிகள் மூலம் இதை ஆரம்பித்தால் வெளி மாநிலங்களுக்கு இதை ஏற்றுமதியும் செய்யலாம். உள்ளூரிலும் தேவைகள் அதிகமாக இருக்கின்றது. அரசின் வங்கிக்கடனும் இதற்கு உண்டு.

மெழுகுவர்த்தி இருட்டில் மட்டுமா வெளிச்சம் தரும்? இது பகுதி நேர வேலை செய்யும் பலரின் வாழ்க்கையிலும்தான்.

மெழுவர்த்தி செய்யும் திறமை அதை உருக்கி வார்தெடுப்பதில்தான் உள்ளது.
கடைக்காரர்களின் திருப்திதான் மிக முக்கியம் என்கிறார்.

சுத்தம் சுகம் தரும். நம் வீட்டில் அனைவரும் மிக அவசியமாக உபயோகப்படுத்துவது பினாயில், சோப் ஆயில். இந்த பொருட்களின் வற்பனையை இளைஞ்கள் ஏஜென்சி எடுத்து செய்யலாம். பயிற்சிகள் மூலம் தாங்களே பொருட்களை உற்பத்தியும் செய்யலாம். 

பெண்கள் தங்கள் இல்லத்தையும் கவனித்துக் கொண்டு சிறுசிறு தொழில்கள் மூலம் தங்களுக்கு என ஒரு வருமானத்தை வைத்துக்கொள்வது சிறந்தது ஆகும். இது பெண்களுக்கு பொருளாதார உரிமையைத் தருகிறது. 

அனைவரிடமும் ஒரு ஆற்றல் இருக்கிறது. அதை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் அது நம்மை விட்டு விலகிவிடும் என்பதே உண்மை.

பஞ்சினால் நாய், கரடி பொம்மைகள் செய்யும் தொழில், அப்பளம், பற்பொடி, குங்குமம், சாக்பீஸ், சீயக்காய் தூள், காளான் வளர்ப்பு என நம் வாழ்க்கையை வளமாக்க மேலும் பல தொழில்கள் தயாராய் உள்ளன.

ஆக, வெற்றி என்பது வானத்து நட்சத்திமல்ல; உள்ளங்கை ரேகைதான்!
Share this Article on :

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Related Posts Plugin for WordPress, Blogger...
 

© Copyright Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD ) 2010 -2011 | Design by INFOTECH SOLUTIONS | Published by Infotech Solutions Templates | Powered by www.infotechwebs.com.