Search This Website

News Update :

PREMIUM BUSINESS ADS - POST ADS HERE

வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி!

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899
For More Details Click Me

ஏற்றுமதி-இறக்குமதி ஓர் அறிமுகம் Export / Import - Introduction

Wednesday, 11 December 2013

நம் நாட்டில் தாராளமாக விளையும் அல்லது கிடைக்கும் பொருட்களை வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்வது ஏற்றுமதி ஆகும்.
வெளிநாடுகளில் இருந்தோ அல்லது விலை குறைவாக உள்ள பகுதிகளில் இருந்து நம் தேவைக்காக வாங்குவது இறக்குமதி ஆகும். - இவ்வாறு பொருட்களை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்து கொள்ள உறுதுணையாக இருப்பது கப்பல் போக்குவரத்து ஆகும்.


இந்த கப்பல் துறையினை சேர்ந்த முக்கிய தொழில்கள் :
1. கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்சி (சி.எச்.ஓ)
2. ஷிப் லைனர் (கப்பல் லைனர்)
3. பிரைட் பார்வர்டிங்
4. கன்டெய்னர் டிரான்ஸ்போர்ட், ஆகியனவாகும்.

1. கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்சி (சி.எச்.ஓ):
சி.எச்.ஓ. என்பது சுங்கவரி தொடர்பான நிறுவனம் ஆகும். ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ ஏற்றுமதி (அ) இறக்குமதி செய்ய வேண்டும் என்றால் இந்த நிறுவனத்திடம் அனுமதி சான்றிதழ் பெற்றுத்தான் செய்ய முடியும்.
அனுமதி சான்றிதழ் என்பது வாணிபத்தின் போது என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்கிறார்கள், அவற்றின் அளவு என்ன, எந்த வகையைச் சேர்நத பொருள் என அனைத்தையும் சரி பார்த்து ஒரு சான்றிதழ் கொடுப்பார்கள். அந்த அனுமதி சான்றிதழின்படி பொருட்கள் இருக்கின்றனவா என சரி பார்த்த பின்னர் அந்த பொருட்கள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும். இது மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டிய தொழில், சிறிது கவனக்குறைவாக இருந்தாலும் கடத்தல் பொருட்கள் இடம் பெற்றுவிட வாய்ப்புண்டு. அது மாதிரியான பொருட்கள் இடம்பெற்றால் அதற்கு அனுமதி சான்றிதழ் வழங்கிய நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்.

இந்த தொழிலை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால், நிறுவனத்தின் உயர் அதிகாரியாக சுங்க வரித்துறை நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றவரை மட்டுமே நியமிக்க வேண்டும். ஏனெனில் ஏற்றுமதி,இறக்குமதி தொடர்பான அனுமதி சான்றிதழில் இவருடைய கையொப்பம் மட்டுமே இருக்க வேண்டும். இவ்வாறிருந்தால் மட்டுமே சி.எச்.ஓ நிறுவனம் தொடங்க சுங்கவரித்துறை அனுமதி அளிக்கும்.



2. ஷிப் லைனர் (கப்பல் லைனர்):
பல கப்பல்களை வைத்திருக்கும் ஒருவர், அவற்றை எல்லாம் தானே நிர்வகிக்க இயலாத காரணத்தால்,எனவே உரிமையாளரைப் போல் ஒருவரை நியமிக்க எண்ணுவார். உரிமையாளரைப் போல் அவற்றை நிர்வகிக்கும் பணியை ஏற்று நடத்தும் தொழில் தான் ஷிப் லைனர் தொழில்.

வெளிநாட்டு நிறுவனத்தின் கப்பல்களை நிர்வகிக்க பொறுப்பேற்றுள்ள நிறுவனம், அந்நிறுவனத்தின் கப்பல்கள் தன் நாட்டின் எந்த துறைமுகத்திற்கு வந்தாலும் இவர்களே முழு பொறுப்பேற்று சரக்குளை ஏற்றம் இறக்கும் செய்ய வேண்டும், அத்துடன் கலங்கரை விளக்கு கட்டணம், பைலட்டேஜ் சார்ஜ், போர்ட்யூஸ் சார்ஜ், பெர்த்ஹயர் சார்ஜ் என பல வகை கட்டணங்களை கப்பல்துறைக்கு செலுத்தியாக வேண்டும். இத்தகைய பணிகளை நிர்வகிக்க தேவையான கட்டணங்களை வெளிநாட்டு நிறுவனத்திடமே பெற்றுக் கொள்ளலாம். இத்தொழிலில் கப்பல் ஒருநாள் துறைமுகத்தில் கூடுதலாக நின்றாலும், அதற்கான கட்டணத்தை நிர்வகிக்கும் நிறுவனம் கூடுதலாக செலுத்தியாக வேண்டும். எனவே, இத்தொழில் மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டிய தொழிலாகும்.

3. பிரைட் பார்வர்டிங்:
இத்தொழிலை அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே சிறப்பாக மேற்கொள்ள முடியும்.
நம் நாட்டில் விளையும் பொருட்களை, வேறு நாட்டவர் ஒருவர் இறக்குமதி செய்ய நினைத்தால் அதற்கான முழு பொறுப்பையும் பிரைட் பார்வர்டிங் செய்யும் ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்து விடுவார். பொறுப்பேற்ற நிறுவனமே நம் நாட்டு பொருட்கள், இறக்குமதியாளரை சென்று சேரும் வரை உள்ள அனைத்து வேலைகளையும் கவனிக்க வேண்டும். இத்தகைய பணிகளை செய்வதே பிரைட் பார்வர்டிங் தொழிலாகும்.

4. கன்டெய்னர் டிரான்ஸ்போர்ட்:
ஏற்றுமதி இறக்குமதியின் போது சரக்குப் பெட்டிகளை, துறைமுகத்திலிருந்து தொழிற்சாலை கிடங்கிற்கோ அல்லது தொழிற்சாலையிலிருந்து துறைமுகத்திற்கோ கொண்டு செல்வதற்கு சரக்கு பெட்டிகளை ஏற்றிச்செல்லும் கன்டெய்னர் லாரிகள் இன்றியமையாதவை. இத்தகைய லாரிகளை வைத்து செய்யப்படும் தொழில் கன்டெய்னர் டிரான்ஸ்போர்ட் ஆகும். இது ஏற்றுமதி,இறக்குமதியில் முக்கியமான பணியாகும்.
இந்த முக்கியத் தொழில்கள் தவிர்த்து லாரி மற்றும் டிரெய்லர் வாடகைக்கு விடும் தொழில், கிரேன் தயாரித்தல் மற்றும் அவற்றை வாடகைக்கு விடுதல், கார்கோ கூரியர், பணியாளர் தேர்வு செய்து தருதல் போன்ற எண்ணற்ற தொழில்கள் உள்ளன.
 For More details to start the above Business to consult Us : Rs. 5000/- Only
Share this Article on :

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Related Posts Plugin for WordPress, Blogger...
 

© Copyright Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD ) 2010 -2011 | Design by INFOTECH SOLUTIONS | Published by Infotech Solutions Templates | Powered by www.infotechwebs.com.