Search This Website

News Update :

PREMIUM BUSINESS ADS - POST ADS HERE

வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி!

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899
For More Details Click Me

பீ.பி.ஓ. BPO துறை வேலைவாய்ப்பில் தமிழகம் முதலிடம்-பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து-

Tuesday, 24 January 2012

பீ.பி.ஓ துறையில் அதிகளவில் வலைவா#ப்பு வழங்குவதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக இந்திய தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்தியாவில், 27 ஆயிரம் காடி ரூபாய் சந்தை
மதிப்பை கொண்டுள்ள, வெளியாரிடம் பணிகளை ஒப்படைத்து பெற்றுக் கொள்ளும் பீ.பி.ஓ துறை, வரும் ஆண்டுகளில் 15 சதவீதம் வளர்ச்சிகாணும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துறையில், குறிப்பிட்ட பிரிவுகளில் உள்ள 4.50  தென்னிந்தியாவின் பங்களிப்பு 22 சதவீதம் வாய்ப்பு இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பாக, வங்கி, நிதி,அரசுதுறைகள், தகவல் தொழில் நுட்பம் மற்றும் அது சார்ந்த தேவைகள், பொதுத் துறை தவிர்த்த உற்பத்தி துறை, சில்லறை வர்த்தகம், வாகனத் துறையில் தேவை நிலையங்கள், சுற்றுலா, கால்நடை, மீன் வளர்ப்பு, கடல்,சாலை,ரயில் சார்ந்த போக்குவரத்து துறைகளில் இத்தகைய வேலை வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.தொழில் உற்பத்தி, சில்லறை வர்த்தகம் மற்றும் அரசுதுறைகளில் அதிக அளவில் வெளியாரிடம் பணிகளை ஒப்படைத்து பெற்றுக் கொள்வது நடைமுறையில் உள்ளது.

கடந்த மூன்றாண்டுகளில், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பது 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இது வரும், ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.132 தேவை நிறுவனங்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கடந்த மூன்று ஆண்டுகளில் அவற்றின் பணியாளர் நியமனம் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, வரும் ஆண்டுகளில் 15 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி காணும்.

தென்னிந்தியாவில், அமைப்பு சார்ந்த துறையில், பணியாளர் தேவை வழங்கும் வர்த்தகத்தில் 8.500 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிறுவனங்களில் 17 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். சென்ற 2010ம் ஆண்டில் இந்நிறுவனங்கள் 120 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்றுமுதலைக் கண்டுள்ளன.இந்நிறுவனங்கள், கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களில் இருந்து அதிக அளவில் பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றன. இதில், பெண்களின் பங்களிப்பு 5-6 சதவீதமாக உள்ளது. மொத்த பணியாளர்களில் 65சதவீதம் பேர், 20-30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பீ.பி.ஓ.  கடுமையான போட்டியை சந்தித்து வருகிறது. அதிக அளவில் பணியாளர்கள், பிற நிறுவனங்களுக்கு செல்வது, விதிமுறைகளில் தெளிவற்றதன்மை போன்றவை, இத்துறையின் வளர்ச்சிக்கு இடர்பாடாக உள்ளன.மத்திய அரசு இப்பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு விதிமுறைகளை கொண்டு வரும் பட்சத்தில், இத்துறையின் வளர்ச்சி வாய்ப்பு அதிகரிக்கும் என்பதோடு, வேலை வாய்ப்பும் பெருகும்.மேலும், இத்துறை சார்ந்த தொழிலாளர் சட்டம் சீரமைக்கப் பட வேண்டியதும் அவசியமாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this Article on :

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Related Posts Plugin for WordPress, Blogger...
 

© Copyright Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD ) 2010 -2011 | Design by INFOTECH SOLUTIONS | Published by Infotech Solutions Templates | Powered by www.infotechwebs.com.