Search This Website

News Update :

PREMIUM BUSINESS ADS - POST ADS HERE

வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி!

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899
For More Details Click Me

சுய தொழில் முனைவோர் திட்டம் : புதிய தலைமுறை ! Self Employment Plans

Saturday, 7 January 2012

இளைஞர்களின் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் எற்பட சுயதொழில் முனைவோர் திட்டத்தை ’புதிய தலைமுறை’ அறிமுகப்படுத்துகிறது. இத்திட்டத்திற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் "வி.தை.க.ள்". அதாவது SELF EMPLOYED ENTREPRENEUR DEVELOPMENT SCHEME .



உழைக்கத் தயார், திறமையும் உண்டு. ஆனால் முதல் போட்டுத் தொழில் தொடங்க கையில் போதுமான பணம் இல்லையா ?. கற்றுக் கொள்ள ஆர்வம் உண்டு. கற்று கொண்டதை செயல்படுத்த முனைப்பும் உண்டு. ஆனால் பயிற்சி கொடுக்க யாரும் இல்லையா ?. இவைதான் உங்கள் பிரச்சனை என்றால், உங்களை போன்ற இளைஞர்களுக்கு கரம் நீட்டுகிறது புதிய தலைமுறை.

சரி, அது என்ன புதிய தலைமுறை சுய தொழில்முனைவோர் திட்டம் ?

இன்றைய நம்பிக்கைக்குரிய இளைஞர்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும். அதற்கு வழிகாட்டவும் விரும்புகிறது "புதிய தலைமுறை" இதழ். அதற்கான தொழிற் பயிற்சிகளை முறையாகவும், இலவசமாகவும் ’புதிய தலைமுறை’ உரியவர்களை கொண்டு வழங்கும். அப்படிப்பட்ட பயிற்சிகளை முறைப்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்க உரிய வல்லுநர்களைக் கொண்டு ஆலோசனைகள் வழங்கும். இது இரண்டாம் கட்டம்.

அந்தத் திட்டங்களின் அடிப்படையில், சொந்தத் தொழில் துவங்கி, பொருளாதார ரீதியாக முன்னேறுவது அடுத்த கட்டம். அந்த நோக்கில் "ரெப்கோ நுண் கடன்", அதன் தாய் நிறுவனமான ரெப்கோ வங்கி (அரசு நிறுவனம்) இவற்றின் ஒத்துழைப்போடு சிறு தொழில் முனைவோர்களை ஒருங்கிணைத்து சுய தொழில் முனைவோர் குழுக்களைப் ’புதிய தலைமுறை’ உருவாக்கும். இதில் ஆண், பெண் யார் வேண்டுமானலும் கலந்து கொள்ளலாம். ஆனால் வயது
18-35 இருக்க வேண்டும்.

வேறு என்ன தகுதிகள் இருக்க வேண்டும் ?

* தொழில் முனைவோராக ஆகும் ஆர்வமும், துடிப்பும் கொண்ட, குழுவாக இணைந்து செயல்படும் மனோபாவம் உடைய, அதே நேரம் குழுவின் நன்மைக்காக விட்டு கொடுக்கும் இயல்புடன் உள்ள இளைஞர்கள்.

* அரசியல், சாதி வேறுபாடு அற்றவர்கள்.

* இயன்ற அளவு ஒரே பகுதியில் வசிக்கும் இளைஞர்களை கொண்டு குழு அமைத்து கொள்வது. ஆகையால் கூட்டாக செய்ல்படும் மனோபாவம் கொண்ட இளைஞர்கள்.

* திறமைகளை வளர்த்து கொண்டு, அதை நடைமுறைப்படுத்த நம்பிக்கையும் உள்ள இளைஞர்கள்.

* குழு கூட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு, ஆர்வமும் பொறுப்பு ஏற்கத் தயாராகவும் உள்ள இளைஞர்கள்.

* சிறு சேமிப்பில் ஆர்வம் உள்ளவர்கள்.

வங்கிக் கடன் :


குழு தொடங்கி, பயிற்சிகள் நிறைவடைந்த நிலையில் குழுக்களின் சேமிப்பின் அடிப்படையில், ரெப்கோ வங்கி விதிகளுக்கு ஏற்ற வண்ணம் வங்கிக் கடன்கள் வழங்கிட ஆவன செய்யப்படும்.

சரி, இந்த திட்டத்தின் மூலம் ’புதிய தலைமுறை’ சாதிக்க விரும்புவது என்ன ?

இன்றைய இளைஞர்கள் தொழில் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். எதிர்காலம் குறித்து திட்டமிடக் கற்க வேண்டும். தங்கள் பொருளாதாரத்தை வலுவாக அமைத்துக்கொண்டு வாழ்வில் உயர வேண்டும், அப்படி முன்னேறும் போது, சமூகத்தின் வளர்ச்சிக்கும், அதன் வழியாக நாட்டின் வளர்ச்சிக்கும் பங்காற்ற வேண்டும். நல்ல சிந்தனை, சீரிய முயற்சி, ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கும் நல்ல பழக்கம், ஒற்றுமை உணர்வும், ஜனநாயகப் பண்பும் கொண்ட ஒரு புதிய தலை முறையை உருவாக்க வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம்.

என்னை பொருத்தவரையில் ’புதிய தலைமுறை’ இதழின் இந்த முயற்சி ஒரு நல்ல வரவேற்க்கத்தக்க முயற்சியாகும். இது போன்ற முயற்சிகளில் கலந்து கொண்டு ஒரு நல்ல தலைமுறையை உருவாக்குவோம்.
Share this Article on :

1 comment:

Shaj Khan said...

SELF EMPLOYED ENTREPRENEUR DEVELOPMENT SCHEME இந்த SCHEME ல் சேர என்ன வழி சகோதரா? ஆர்வமாய் இருக்கிறேன்.

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Related Posts Plugin for WordPress, Blogger...
 

© Copyright Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD ) 2010 -2011 | Design by INFOTECH SOLUTIONS | Published by Infotech Solutions Templates | Powered by www.infotechwebs.com.