Search This Website

News Update :

வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி!

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899
For More Details Click Me

ஆன்லைனில் சம்பாதிக்க - தொழில் பயிற்சி EARN ONLINE, BUSINESS TRAINING

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம்.

தொழில் : ஆன்லைன் ஜாப்

வருமானம் : Rs.2000 to Rs. 8000/-

Cell: 09566936899

THOLILULAGAM BANK DETAILS

Bank Name : Indian Overseas Bank
Branch Name : Singanallur, Coimbatore - 5
Branch Code : CBS 1844
Current Ac No : 184402000000556
In Favour Of : INFOTECH SOLUTIONS
IFSC Code :
IOB A 0001844

தொழில் கடன் வேண்டுமா? Do you need Business Loan?

குடிசைத் தொழில், குறுந்தொழில், சிறுதொழில்,கடைகள் துவங்க, நிறுவனங்கள் நடத்தவும், கன்சல்டிங் செய்பவர்களுக்கும், தொழிற்சாலைகள் நடத்தவும்,மெசினரிக் கடன்கள், மூலதனக் கடன்கள், பிசினஸ் லோன் பெறவும்

தொடர்புக்கு:

ஸ்கை மேனேஜ்மென்ட் சர்வீஸ்,
122/A5, மூகாம்பிகா காம்ப்ளக்ஸ், 2-வது தளம், அகில்மேடு 6 வது வீதி, கல்யாண் சில்க்ஸ் பின்புறம், ஈரோடு - 638001,
செல்: 0-9977464889

தொழில் ஆலோசனை (Business Consulting)

சுய தொழில் தொடங்க,
தொழிலை மேம்படுத்த,
மெசினரிகள் வாங்க,
தொழில் சம்பந்தப்பட்ட லோன்கள்,
மார்க்கட்டிங் தொடர்பான சந்தேகங்கள் போன்ற அனைத்திற்கும் ஆலோசனைக்கு போனில் தொடர்பு கொண்டு பின் நேரில் வரவும் :

செல்: 0 - 9566936899
Erode.
E-mail: tholilulagam@gmail.com

ஆன்லைன் வேலை ONLINR JOB - பெண்கள் மட்டும்

தமிழகம் முழுவதும் டிகிரி படித்த ஆங்கிலம் நன்கு படிக்கத் தெரிந்த லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் கம்பியுட்டர் இன்டர்நெட் கனேக்சனுடன் வைத்துள்ளவர்கள் மேலும் கம்பியுட்டரை வேகமாக கையாலத்தெரிந்தவர்கள் மட்டும் எங்கள் இணையத் தளத்தை பார்வையிட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்

இணையத்தள முகவரி :
www.onlinedataproject.blogspot.com

AGENCY / AGENT

Are you Searching an agency / Agent Opportunity?

Are you plan to appoint an Agent / Agency?

Kindly visit our Website and Post your Needs Free


http://www.agentsrequired.blogspot.com

RESUME WRITING

E Mail Marketing Service மின்னஞ்சல் மார்க்கெட்டிங் சேவை

Friday, 23 February 2018

தொழில் உலகம் நண்பர்களே! நிறுவன உரிமையாளர்களே! வாசகர்களே! 

மாறிவரும் உலக நடைமுறைகளுக்கேட்ப தொழிலை மார்க்கெட்டிங் செய்வதட்கான முறைகளும் மாறி வருகிறது. ஆகவேதான் தொழில் உலகம்.காம் இ- மெயில் மார்க்கெட்டிங் சேவையினை E mail Marketing Service அளிக்கவிருக்கிறது.


இந்த சேவையின் மூலம் உங்களை தொழில் பற்றிய விபரங்களை அல்லது உங்களது தயாரிப்புக்களை பற்றி அல்லது விற்கும் பொருட்களின் விபரங்களை படத்துடன் வேர்டு அல்லது பிடிஎப் பார்மேட்டில் மொத்தமாக பலருக்கும் அனுப்பி வைக்க இயலும். 

இதனால் உங்களின் நேரம் மிச்சப்படுவதோடு உங்களின் மார்க்கெட்டிங் செலவும் Marketing Expenses குறைக்கப்படுகிறது.

தொழில் உலகம் மிகக் குறைந்த செலவில் பல்வேறு பேக்கேஜுகளில் கொடுப்பதனால் உங்களின் தேவை, மற்றும் பொருளாதார வசதிக்கேட்ப இ-மெயில் அளவினை தேர்ந்தெடுக்கலாம்.

குரூப் A  -  1000 மெயில்கள் 

குரூப் B  -  5000 மெயில்கள் 

குரூப் C  -  10000 மெயில்கள்

குரூப் D  -  25000 மெயில்கள்

குரூப் E  -  50000 மெயில்கள்

 குரூப் F  -  100000 மெயில்கள்  

மெயில் அனுப்பப்பட்டதற்கான ரிப்போர்ட் இ மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும் 

எங்களது மின்னஞ்சல் மார்க்கெட்டிங் சேவை தேவைப் படுவோர் கீழே  கொடுக்கப்பட்டுள்ள எண்களில் அல்லது இ-மெயில் மூலம் தொடர்பு கொள்ளவும்.

Cell: 09566936899

E Mail: tholilulagam@gmail.com

சுயதொழில் - பாக்கு மட்டை பிளேட் தயாரிப்பு

Monday, 12 February 2018

இயற்கையாகக் கிடைக்கும் ஒரு பொருளை மதிப்புமிக்க பொருளாக மாற்றினால் வெற்றி நிச்சயம். அந்த வகையில் வீணாகக் குப்பையில் போடப்பட்டு வந்த பாக்குமட்டையிலிருந்து சுற்றுபுறச்சூழலைப் பாதிக்காத பிளேட்டுகள் தயாரிக்கப்பட, இப்போது அது மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. விசேஷங்களில் பெருமளவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. விளைவு வீணான பொருள் விலைமதிப்பிற்குரிய பொருளாக மாறிவிட்டது.இதன் காரணமாக, பாக்கு மட்டை தயாரிக்கும் தொழில் இப்போது கனஜோராக நடந்து வருகிறது. சிறுதொழில் செய்ய நினைப்பவர்களுக்கும் குறைந்த முதலீட்டில் தொழில் செய்ய நினைப்பவர்களுக்கும் இந்த தொழில் நிச்சயம் கை கொடுக்கும். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு ஏதுவான தொழில் இது.


 


தயாரிக்கும் முறை!

பாக்கு மட்டையை சுத்தமான தண்ணீர் தொட்டியில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு பிரஷ்ஷினால் சுத்தம் செய்து அதிலிருக்கும்  அழுக்குகளை அகற்ற வேண்டும். சுத்தம் செய்யப் பயன்படுத்தும் தண்ணீரில் வேப்ப எண்ணெய் அல்லது மஞ்சள் தூள் போன்றவற்றை கலந்து  கொள்ளலாம். இதனால் மட்டைகளில் பூஞ்சை வருவது தடுக்கப்படும். பிறகு அந்த மட்டைகளை சூரிய வெளிச்சத் திலோ அல்லது காற்றிலோ உலர வைக்க வேண்டும். ஆனால், மட்டை காய்ந்து பிளந்துவிடும் அளவுக்கு காய வைக்கக் கூடாது. பக்குவமான பதத்தில் காய்ந்த மட்டைகளே சரியாக வரும். காய்ந்த மட்டைகளை இயந்திரத்தில் கொடுத்து பிரஸ் செய்யும்போது வெப்பத்தினால் மட்டை பக்குவப்பட்டுவிடும். சூடு தணிந்த பின்பு பிளேட்டுகளை தேவையான அளவுகளில் இயந்திரத்திலேயே கட் செய்து எடுத்து, சுத்தம் செய்தால் விற்பனைக்கு ரெடி!


 
வேலையாட்கள்!

இந்த தொழிலுக்கு குறைந்த பட்சம் இரண்டு முதல் ஏழு நபர்கள் வரை வேலைக்கு தேவைபெரும்பாலும் வீட்டிலிருப் பவர்களை வைத்தே இந்த தொழிலை செய்துவிடலாம்.

தயாரிக்கப்படும் அளவுகள்!

12 இஞ்ச் அளவு கொண்ட பிளேட் கல்யாண வீடுகளிலும், 10 இஞ்ச் பிளேட்டுகள் வளைகாப்பு விசேஷங்கள் மற்றும் சுற்றுலா தேவைகளுக்கும், 8, 6 இஞ்ச் பிளேட்டுகள் கோயில்களில் அன்னதானம் வழங்கவும், 4 இஞ்ச் பிளேட்டுகள் பிரசாதங்கள் வழங்குவதற்கும் பயன்படுகின்றன.சாதகங்கள்!

* சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருள். எந்தவிதமான செயற்கை வாசமும், கெமிக்கல் கலப்படமும் கிடையாது.
* கையில் வைத்து சாப்பிடுவதற்கு சுலபமாக இருப்பதால் பார்ட்டிகளிலும், பஃபே முறையில் சாப்பிடுவதற்கும் பயன்படுத்தலாம்
* மைக்ரோவேவ் அவனில் சமையல் செய்யும்போது உணவுகளை சூடுபடுத்த இந்த பிளேட்டுகளை பயன்படுத்தலாம்.
* விரும்பிய வடிவங்களில் தம்ளர், கிண்ணம் போன்ற வடிவங்களில்கூட இதைத் தயாரிக்கலாம்.

பாதகங்கள்!


மழைக் காலத்தில் பாக்குமட்டை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே, மழைக் காலத்திற்கு முன்பே பாக்கு மட்டையை வாங்கி வைத்துக் கொள்வதன் மூலம் மூலப்பொருள் கிடைக்காமல் திண்டாடும் நெருக்கடியைத் தவிர்க்கலாம். அத்துடன் மழைக் காலத்தில் பாக்கு மட்டையில் பூஞ்சைகள் வர வாய்ப்பிருக்கிறது. அதனை தடுக்கும் விதமாக பாக்கு மட்டைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள் கிடைக்கும் இடங்கள், தேவையான முதலீடு தொகை எவ்வளவு?, பைனான்ஸ் கிடைக்குமா?, மானியம் பெறுவது எப்படி? மானியம் எங்கு எப்போது கிடைக்கும்? என்னென்ன இயந்திரங்கள் தேவைப்படும்? பிளேட் விற்பனை விலை நிர்ணயம் மற்றும் சந்தை வாய்ப்பு ஆகிய விபரங்கள் தேவைப்படின்  Rs. 250/- மட்டும் ஆன்லைனில் அல்லது வங்கி மூலம் செலுத்தி 30 நிமிடங்களில் தங்களின் இ-மெயிலுக்கு அல்லது மொபைல் Whats App-ல்  பெற்றுக் கொள்ளலாம்.

Bank Name : Indian Overseas Bank
Branch Name : Singanallur, Coimbatore - 5
Branch Code : CBS 1844 
Current Ac No : 184402000000556
In Favour Of : INFOTECH SOLUTIONS
IFSC Code 
IOB A 0001844

தொடர்புக்கு: ஜெயசெல்வன்: Cell: 9566036899

பாக்கு மட்டை பிளேட் தயாரிக்கும் இயந்திரம் வாங்க தொடர்புக்கு: 07373630788

லோன் பெற பிராஜெக்ட் தேவைப்படுபவர்கள் ஆன்லைன் மூலம் Rs.2500/- பணம் செலுத்தி இ- மெயிலில் பெற்றுக் கொள்ளலாம். 

சுய தொழில் புரிய உங்களுக்கான சில வழிக்காட்டுதல்கள் Suyatholil Guidelines

Sunday, 11 February 2018

சுய தொழிலில் இருககிற ரிஸ்க் மற்றும் அதனை ரஸ்காக மாற்றுவது எப்படி என்பதை பற்றியெல்லாம் தெரிஞ்சுக்குவோம். ஒருவரிடம் வேலை செய்வது நமக்கு சிக்கல்ன்னா அதேபோன்று சுய தொழில் செய்வது இன்னும் சிக்கலோ சிக்கல் என்ற கருத்து நம்மிடையே இருந்து வருகின்றது அது தவறான கணிப்பு. சுய தொழில் செய்யும் போது நமக்கு கூடுதல் பொறுப்பு கிடைக்கும். நமக்கு நாமே ராஜா அதே மாதிரி நமது தொழில் வளர்ச்சி நமது கையில்தான் இருக்கும். தொடர்ந்து தொழிலில் இருக்க வேண்டிய  அனைத்து  புதிய புதிய மாற்றங்களை தெரிந்து கொண்டு புதிய மாற்றங்களை நீங்கள் செய்யும் தொழிலில் புகுத்தி செயல்படுங்கள்

சுய தொழில் Self Employment:

சுய தொழில் புரிய தொழிலில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். தொழில் செய்வதற்கு உரிய ஞானம் இருக்க வேண்டும். அதென்னப்பா ஞானம்ன்னு கேக்கிறிங்களா, அதாங்க சுயதொழில் செய்வதற்கான தொழில் பற்றிய புரிதல், வேலை செய்த அனுபவம் அத்துடன் வேலையின் நெளிவு சுழிவு என அனைத்தும் தெரிந்தவர்கள் நிச்சயமாக தொழில் செய்ய தகுதியுடையவர்கள் ஆவார்கள் .சுய தொழில் பயிற்சி Self Employment Training :

நீங்க சொந்தமா பிஸ்னஸ் Business செய்ய முதலில் சரியாக செயல்படுத்தக்கூடிய ஏட்டுக்கல்வி அனுபவத்தை விட நீங்கள் செய்யப்போகும் தொழிலில் குறைந்தபட்சம் ஆறுமாதம் முதல் ஒருவருடம் அதற்கு மேல் பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் தொழிலில் உங்களுக்கொரு தெளிவு இருக்கும். டு இசட் தெரிந்திருக்க வேண்டும்.

ஏற்ற இறக்கங்கள் :

நீங்கள் என்னதான் தொழிலில் டானாக வளர்ந்தாலும் ஆரம்ப காலகட்டம் தொழிலின் நேக்குகள் பிடிப்பட்ட கொஞ்ச நாட்கள் ஆகும். சொந்த தொழில் புரியும் ஆரம்ப காலகட்டத்தில் தொழிலில் நிச்சயமாக ஏற்ற இறக்கங்கள் வருவது சகஜம், சில சமயம் வருமானமே இல்லாத சூழல் கூட வரும் அதற்கு எல்லாம் முன்க்கூட்டியே செய்யப்பட்ட பிளானில் நாம் சரியாக ஏற்ற இறக்கம் குறித்து ஏற்கனவே வரையறுத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஏற்படும் சிக்கல்களை நாம் சமாளிக்க முடியும் எப்பொழுதும் எந்த சூழலிலும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

சுமார்ட் வொர்க் Smart Work :

நீங்க செய்யும் சுய தொழில் எதுவாக இருந்தாலும் டெடிகேசனாக இருங்க, ஹார்டு வொர்க் மட்டும் பத்தாது சுமார்ட் வொர்க் செய்யுங்க எதற்கும் தயாராக இருங்க. போராட்ட குணம் இருக்க வேண்டும் அது இருக்கும் பொழுது உங்களை யாராலும் அசைக்க முடியாது.


பாட்னர்சிப்பில் கவனம் தேவை Partnership :

சுய தொழில் செய்பவர்களுக்கு இருக்க வேண்டிய முக்கிய கவனம் பாட்னர்சிப்பில் கவனமாக இருக்க வேண்டியது ஆகும். உங்களுடன் இருப்பவர் உங்களுக்கு சமமாக இருப்பாரெனில் நல்லது. அவரிடம் டெடிகேசன் குறைவாக இருந்தாலோ, ஆர்வமில்லாதவராக இருந்தாலோ அவருடன் பாட்னர்சிப் பேச்சுக்கு இடம் கொடுக்காதிர்கள்.


தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme)


தமிழ்நாட்டில் அதிக தொழில் முனைவோரை உருவாக்க New Entrepreneur -cum- Enterprise Development Scheme-NEEDS (புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்) என்ற திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme) திட்டத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது. NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme) திட்டத்தில் ரூ.5 இலட்சத்திற்கு மேலும் அதிகபட்சமாக ரூ.1 கோடி வரையிலும் உள்ள தொழில் திட்டங்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் அரசு மானிய உதவியாக தொழில் திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடும் அதிகபட்சமாக 25இலட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது.

தொழிலின் திட்ட மதிப்பு (Levels Of Funding Under NEEDS):

  தொழிலுக்கான திட்ட மதிப்பு ரூ.5 இலட்சத்திற்கு மேலும் ரூ.1 கோடி வரையிலும் (The minimum Project Cost will be above Rs.5.00 Lakhs and the maximum Project Cost will be Rs.1.00 Crore) இருந்தால் அதற்கான முதலீட்டை NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme) திட்டதின் மூலம் பெறலாம்.அரசு மூலதன மானியம்(Rate of Subsidy) :

   NEEDS திட்டத்தில் அரசு மூலம் வழங்கப்படும் மானிய (Subsidy) உதவி தொழிலின் திட்ட மதிப்பில் (Project Value) 25% சதவீதம் ஆகும். அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் வரை வழங்கப்படும்.

தொழில் முனைவோர் சொந்த முதலீடு (Promoter’s Contribution):

பொதுப்பிரிவினராக இருந்தால் தொழிலின் திட்ட மதிப்பீட்டில் (Project Value) குறைந்தபட்சம் 10% விழுக்காட்டை தொழிலில் முதலீடு (Investment) வேண்டும்.
சிறப்புப் பிரிவினராக இருந்தால் தொழிலின் திட்ட மதிப்பீட்டில் (Project Value) குறைந்தபட்சம் 5% விழுக்காட்டை தொழிலில் முதலீடு (Investment) வேண்டும்.

வயது மற்றும் வருமான வரம்பு (Age Limit & Income ceiling):

 NEEDS  (New Entrepreneur -cum- Enterprise Development Scheme) திட்டத்தில் பயனடைய 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினராக இருப்பின் 35 வயதிற்குள்ளும், சிறப்புப்பிரிவினராக இருப்பின் 45 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

வருமான வரம்பு ஏதும் NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme) திட்டத்தில் இல்லை. எல்லா வருமான வரப்பினரும் விண்ணபிக்கலாம் (There will be no income ceiling for assistance for setting up projects under NEEDS).

கல்வித் தகுதி (Academic Qualification):

   பட்டப்படிப்பு (Degree), பட்டயப் படிப்பு (Diploma), I.T.I, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழில் பயிற்சிகளைப் (Vocational Training from recognized Institutions) பெற்றவர்கள் NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme) மூலம் பயன் அடையலாம்.

சிறப்புப் பிரிவினர் (Special category):

  ஆதி திராவிடர், மகளிர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், முன்னாள் இராணுவத்தினர், மாற்று திறனாளிகள் ஆகியோர் NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme) சிறப்புபிரிவு தொழில் முனைவோர்களுக்கான சலுகைகளை பெறத் தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கவேண்டிய அரசு அலுவலகங்கள் (Implementing Agencies):

  NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme) திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற மாவட்ட தொழில் மையத்தை (DIC-DISTRICT INDUSTRIES CENTRES) அணுகி விண்ணபிக்கலாம். மாவட்ட தொழில் மையங்கள் தமிழ்நாட்டிலுள்ள எல்லா மாவட்டங்களிலும் அமைந்துள்ளது.

கடனுதவி அளிக்கும் நிறுவனங்கள் (Loan Granting Institution):

   NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme)  திட்டத்தில் தேர்ந்தேடுக்கப்படுபவர்கள் வங்கிகள் (Banks) அல்லது TIIC (TAMILNADU INDUSTRIAL INVESTMENT CORPORATION) மூலம் கடனுதவி பெற பரிந்துரைக்கப்படுவர்.

NEEDS திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியற்றவர்களும்,தொழில்களும் (Negative List of Activities):

மத்திய அல்லது மாநில அரசின் மானியத்துடன் கூடிய ஏதேனும் ஒரு திட்டத்தில் கடன் பெற்றவர்கள் NEEDS திட்டத்தில் விண்ணபிக்க இயலாது.

தொழில் முனைபவர் தமிழ் நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வசிப்பவராக இருத்தல் வேண்டும் (The applicant should be a resident of Tamil Nadu State for not less than 3 years).

வியாபாரம் சார்ந்த தொழில்கள் (பல சரக்கு கடை,மளிகை கடை, பொருட்களை வாங்கி, விற்கும் தொழில்) தொடங்க NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme) திட்டத்தில் விண்ணபிக்க இயலாது.

படித்து கொண்டிருப்பவர்கள் மற்றும் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு NEEDS மூலம் முதலீட்டை பெற இயலாது.

இறைச்சி சம்பந்தப்பட்ட தொழில்கள் (Meat(slaughtered),i.e.processing, canning and/or serving items made of it as food), போதை பொருட்கள் சார்ந்த தொழில்கள் (Beedi/Pan/ Cigar/Cigarette etc),தோட்டச் செடிகள், மலர்ச் செடிகள், மீன், கோழி, ஆடு, மாடு வளர்ப்பு (Horticulture, Floriculture, Animal Husbandry like Pisciculture, Piggery, Poultry), மது பரிமாறும் உணவு விடுதிகள், 20 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பாலித்தீன் பைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை தொடங்க NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme) திட்டத்தில் பயன் பெற இயலாது.

கடனுதவி பெற தேர்வு செய்யப்பட்ட தொழில் முனைபவர் ஒரு மாத தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியை கட்டாயமாகப் பெறவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு :

அருகில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை (DIC-DISTRICT INDUSTRIES CENTRES) தொடர்பு கொள்ளலாம்.

லாபகரமான லாஜிஸ்டிக் தொழில்

தற்போது எந்த ஒரு வணிக நடவடிக்கையும், உற்பத்தி துறையும் லாஜிஸ்டிக்கை மையமாக வைத்தே செயல்பட்டு வருகிறது. சரக்கு போக்குவரத்து துறையின் புதிய பரிணாம பெயர்தான் லாஜிஸ்டிக். 

இந்த துறையில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சரக்குகளை கையாளும் போது மிக நுட்பமான முறையில் அதிக கவனத்துடன் கையாள வேண்டும்.  அவ்வாறு செய்யும் போதுதான் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற முடியும்.

ஒரு பொருளை தேவையான நேரத்தில் தேவையான நபருக்கு சரியாக கொண்டு சென்று கொடுப்பது லாஜிஸ்டிக்கின் நோக்கமாகும்.தரைவழி போக்குவரத்து, கடல்வழி போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, பைப் லைன் போக்குவரத்து என லாஜிஸ்டிக்கில் பல வழிமுறைகள் உள்ளன.

தரைவழி போக்குவரத்து குறுகிய தூரத்திற்கான பொருட்களை கொண்டு செல்வதற்கு பயன்படுகிறது.

இராணுவம், பெரிய தொழில் நிறுவனங்கள் போன்றவை தமது பொருட்களை கொண்டு செல்வதற்கு பெரும்பாலும் தரைவழி போக்குவரத்தையை தேர்வு செய்கின்றன. 

மிக அவசரமாக கொண்டு செல்லப்படும் பொருட்கள், அதிக விலை கொண்ட பொருட்கள் போன்றவற்றிக்கு வான்வழி போக்குவரத்து பயன்படுத்தப்படுகிறது.

ரயில் போக்குவரத்தை சிமெண்ட், நிலக்கரி, இரும்புத்தாது, உரங்கள், பெட்ரோலியம், டீசல், பயிறு வகைகள், தானியங்கள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி செல்வதற்கு பயன்படுத்துகின்றனர்.

கடல்வழி போக்குவரத்து கனமான பொருட்களை கொண்டு செல்ல அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த போக்குவரத்தில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் குறிப்பிட்ட இடத்திற்கு போய் சேர்வதற்கான கால அளவு அதிகம் தேவைப்படுகிறது.

எனவே பொருட்களின் தன்மை குறித்து முதலிலேயே தீர்மானித்துக் கொள்வது அவசியம்.

பைப்லைன் எனப்படும் குழாய் வழி போக்குவரத்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு பொருட்களை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த போக்குவரத்து முறை அதிகம் செலவு பிடிப்பதால் இதை அரசுத்  துறை மட்டும் கடைப்பிடிக்கிறது.

லாஜிஸ்டிக்கில் பல்வேறு முறைகள் இருப்பதால் முறையாக திட்டமிட்டு ஒருங்கிணைத்து செயல்பட்டால் அதிக அளவில் லாபம் பெற முடியும்.

இந்த துறையில் கணினியின் Computer பயன்பாடு அதிகரித்திருப்பதால் தகவல் பறிமாற்றம் அதிகரித்துள்ளது. எந்த நிறுவனமாக இருப்பினும் அதன் வெற்றிக்கு லாஜிஸ்டிக் முக்கிய அம்சமாக திகழ்கிறது.  

எனவே இந்த துறையில் ஈடுபட்டு தொழில் செய்ய நினைப்பவர்கள் சரியான முறையில் சேவை செய்து உரிய நேரத்தில் டெலிவரி கொடுத்தால் அதிக வாடிக்கையாளர்களை பெற்று நிறைய லாபம் சம்பாதிக்க முடியும்.

மேலும் இத்தொழிலை மாநில அளவில் State Level என்று இல்லாமல் தேசிய அளவு, National Level சர்வதேச அளவு International Levfl என விரிவுபடுத்தி ஏராளமாக சம்பாதிக்க முடியும்.

லாஜிஸ்டிக்ஸ் தொழில் ஆரம்பிக்க என்னென்ன தேவை? எதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்? எவ்வளவு முதலீடு தேவைப்படும்? தொழிலை எப்படி வெற்றிகரமாக நடத்துவது? ஆகிய அனைத்து விபரங்களையும் ஆலோசனைக்கட்டணம் செலுத்தி அறிந்து கொள்ள தொடர்பு கொள்ளவும்: Selvam, Cell: +91-9566936899

ALL IN ONE CCTV - NO DVR - PLUG & PLAY

ALL IN ONE CCTV - NO DVR - PLUG & PLAY
Wireless CCTV

Banner Ad Rs. 350/- per Month

Banner Ad Rs. 350/- per Month

Popular Posts

About Me

My photo

I am creative & Innovative. I am interested to help someone in anyway. Especially this site give me a chance to help others. This www.tholilulagam.com is stepping stone for the Business Start up Peoples and who search the Business Ideas. So i am expecting some support like paid article from the companies / Entrepreneurs.

Banner Ad Rs. 350/- per Month

Banner Ad Rs. 350/- per Month
தொழில் உலகம் ஆன்லைன் பத்திரிக்கைக்கு தொழில் சார்ந்த கட்டுரைகள், பேட்டிகள், நிறுவன மற்றும் புதிய / நவீன பொருட்களின் அறிமுகங்கள், வர்த்தக விளம்பரங்கள், வரிவிளம்பரங்கள் சேகரிக்க அனுபவம் அல்லது ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக தேவை. முழுநேரம் / பகுதிநேரம் பணியாற்றி நல்ல வருமானம் ஈட்டலாம். - தொழில் உலகம். காம்,
VACANCY: ALL TAMILNADU CITIES
CONTACT: Admin Office, Erode

தொடர்புக்கு : 0 - 95669368997
Mail:tholilulagam@gmail.com
நீங்கள்

தொழில் நடத்துபவரா?
தொழில் ஆலோசகரா?
தொழில் கடன் தருபவரா?
( Business Loan)
தொழில் ஆரம்பிக்கவிருப்பவரா?

மெசினரிகள் தயாரிப்பவரா?
பொருட்களை வாங்கி விற்பவரா?
முகவர்கள் தேவைப்படுவவரா? (Agents)
பங்குதாரர்கள் ( Partners ) தேவைப்படுவவரா?

நிறுவனத்தை, தொழிலை
மக்களிடம் அறிமுகம் செய்ய வேண்டுமா?

மேற்படித் தேவைகள் எதுவாயினும்
தொழில்உலகம்.காமில் விளம்பரம் செய்து
பயன்பெறுவீர். வெற்றியடைவீர்!

வாழ்த்துக்களுடன்
தொழில்உலகம்.காம்
Mail: tholilulagam@gmail.com
09566936899
Water Purifier - RO
 

© Copyright Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD ) 2010 -2011 | Design by INFOTECH SOLUTIONS | Published by Infotech Solutions Templates | Powered by www.infotechwebs.com.